Published : 07,Mar 2020 02:00 PM

வயலில் இறங்கி நாற்று நட்ட முதல்வர் பழனிசாமி

Chief-Minister-Edappadi-Palanisamy-in-Thiruvarur-with-farmers

திருவாரூரில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, விவசாயிகளுடன் சேர்ந்து வயலில் இறங்கி நாற்று நட்டார்.‌

image

நாகப்பட்டினம் அரசு மருத்துவக்கல்லூரிக்கு அடிக்கல் நாட்டு விழாவிற்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நீடாமங்கலம் வழியாக காரில் சென்று கொண்டிருந்தார். அப்போது கொண்டையாறு கிராமத்தில் வயலில் பெண்கள் நாற்று நட்டுக் கொண்டிருப்பதை கண்ட அவர், காரை நிறுத்தச் சொல்லியுள்ளார்.

காரில் இருந்து இறங்கிய முதலமைச்சர், வயலுக்கு சென்று நடவு நட்டுக்கொண்டிருந்த விவசாயிகளிடம் கலந்துரையாடினார். அப்போது வயலில் வேலை செய்து கொண்டிருந்தவர்கள் மகிழ்ச்சி அடைந்தனர். அத்துடன் நின்று விடாமல் முதல்வர் வேட்டியை மடித்துக்கட்டிக் கொண்டு வயலில் இறங்கி நாற்று நடத் தொடங்கினார்.

இதனைப் பார்த்து அங்கிருந்த பெண் விவசாயிகள் கைதட்டி உற்சாகம் அடைந்தனர். முதல்வர் சேற்றில் இறங்கி நாற்று நட்ட நிகழ்வு விவசாயிகள் மத்தியில் பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அப்போது உணவுத்துறை அமைச்சர் காமராஜ் உடன் இருந்தார்.

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்