Published : 26,Feb 2020 06:28 AM
“போலீஸின் மெத்தனமே காரணம்”- டெல்லி வன்முறை குறித்து உச்சநீதிமன்றம் கருத்து

டெல்லியில் ஏற்பட்ட வன்முறை சம்பவத்திற்கு காவல்துறையின் மெத்தனபோக்கே காரணம் என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.
இதுதொடர்பான வழக்கு உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, டெல்லியில் வன்முறை பெரிய அளவில் பரவியதற்கு காவல்துறையினரின் மெத்தனப்போக்கே காரணம் என்று தெரிவித்த உச்சநீதிமன்றம், டெல்லியில் வன்முறை நடப்பது துரதிர்ஷ்டவசமானது என்றும் கூறியுள்ளது.
மாநிலங்களவை தேர்தல்: அதிமுக, திமுக சார்பில் யார் யாருக்கு வாய்ப்பு?
நிலைமை கைமீறி செல்லும் அளவுக்கு ஏன் விட்டீர்கள் என மத்திய அரசுக்கு கேள்வி எழுப்பிய நீதிபதிகள், வன்முறைகளை தடுப்பதில் உரிய நடைமுறைகளை காவல்துறையினர் பின்பற்றவில்லை எனவும் தெரிவித்துள்ளது.
டோக்கியோ ஒலிம்பிக் நடக்குமா? - கொரோனாவால் குழப்பத்தில் கமிட்டி?
டெல்லியில் குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு ஆதரவு மற்றும் எதிர்ப்பு தெரிவித்து நடைபெற்ற இருவேறு பேரணியில் இருதரப்புக்கும் இடையே வன்முறை வெடித்தது. வடகிழக்கு டெல்லியில் 3-ஆவது நாளாக நேற்றும் வன்முறைகள் தொடர்ந்தன. வன்முறையில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 20 ஆக அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.