Published : 22,Feb 2020 10:47 AM

ட்ரம்பிற்காக இந்தியா வந்துள்ள மரைன் ஒன் ஹெலிகாப்டர் - சிறப்பம்சங்கள் என்ன?

After-The-Beast-Trumps-personal-helicopter-Marine-One-lands-in-India


இந்திய பயணத்தின்போது அதிபர் ட்ரம்ப் பயன்படுத்துவதற்காக பிரத்யேக ஹெலிகாப்டர் மரைன் ஒன் அமெரிக்காவிலிருந்து கொண்டுவரப்பட்டு தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது.

image

அமெரிக்க அதிபர் பயணிக்கும் ஹெலிகாப்டர் எதுவாகினும் அது மரைன் ஒன் என்ற குறியீட்டுப் பெயரில் அழைக்கப்படும். அவரது பயன்பாட்டுக்காக, அதிபருக்கான ஹெலிகாப்டர்கள் அணியில் 19 ஹெலிகாப்டர்கள் இருக்கின்றன. அதில் 3D SEA KING வகை ஹெலிகாப்டர்கள் 11ம், VH-60N WHITE HAWKS ரக ஹெலிகாப்டர்கள் 8ம் இடம் தற்போது பெற்றிருக்கின்றன. அமெரிக்க அதிபரின் வெளிநாட்டுப் பயணங்களின்போது இவற்றில் 5 ஹெலிகாப்டர்கள் சரக்கு விமானங்களில் கொண்டு செல்லப்படுகின்றன.

image

'இந்தியாவில் மதச் சுதந்திரம் குறித்து ட்ரம்ப் பேச வாய்ப்பு' - வெள்ளை மாளிகை 

73 அடி நீளம். 17 அடி உயரம். மணிக்கு 241 கிலோ மீட்டர் வேகத்தில் பறக்கும் திறனுடன், 14 பேர் அமரும் வகையில் ஹெலிகாப்டர் வடிவமைக்கப்பட்டிருக்கிறது. இதை ஹெலிகாப்டர் என்று சொல்வதை விட பல்வேறு வசதிகள் நிரம்பிய வீடு என்றே கூறலாம். 200 சதுர அடி அளவுக்கான அறையும், கழிப்பறையும் பிரத்யேகமாக இடம்பெற்றுள்ளன. சாதாரண சத்தத்தோடு அதிபர் பேசுவதற்கு வசதியாக, வெளிப்புற ஒலியைக் குறைத்து ஹெலிகாப்டரின் கேபின்கள் வடிவமைக்கப்பட்டிருக்கின்றன. கடல் அரசன் என்றும் அழைக்கப்படும் இந்த ஹெலிகாப்டரில் ஏவுகணைகள் வீசும் வசதி, ஏவுகணைகளை மறித்துத் தாக்குவது, ரேடார்கள், எச்சரிக்கை கருவி உள்ளிட்ட அம்சங்கள் இடம்பெற்றிருக்கின்றன.

image

இந்த வகை ஹெலிகாப்டரில் மொத்தம் 3 என்ஜின்கள் இருக்கின்றன. இதில் ஒரு இன்ஜின் பழுதடைந்தாலும், ஹெலிகாப்டரால் எவ்வித பிரச்னையுமின்றி பறக்க முடியும். HMX-1 SQUADRON அணியைச் சேர்ந்த நைட்வாக்ஸ் என அழைக்கப்படும் 4 விமானிகள் மட்டுமே, அதிபரின் மரைன் ஒன் ஹெலிகாப்டரை ஓட்டத் தகுதி பெற்றவர்களாக இருப்பார்கள். அதிபரை ஏற்றிச் செல்லும் மரைன் ஒன் ஹெலிகாப்டர் உலகின் எந்த மூலையில் தரையிறங்கினாலும், அங்கு அவரை வரவேற்று மரியாதை செய்ய மரைன் வீரர் ஒருவர் தயார் நிலையில் இருப்பது இன்றும் கடைபிடிக்கப்பட்டு வரும் மரபாகும்.

விசா கட்டுப்பாடுகள் காரணமா?: இந்திய நிறுவனங்களில் அதிகரிக்கும் அமெரிக்க ஊழியர்கள்! 

image

வரும் 24ஆம் தேதி இந்திய வரும் அமெரிக்க அதிபர் ட்ரம்ப், குஜராத்தின் சர்தார்வல்லபாய் படேல் மைதானத்தில் நடக்கும் நமஸ்தே ட்ரம்ப் என்ற கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடியுடன் பங்கேற்கிறார். இந்த நிகழ்ச்சியை முடித்துக்கொண்டு இந்த மரைன் ஒன் ஹெலிகாப்டரில் அகமதாபாத் விமான நிலையத்துக்கு ட்ரம்ப் செல்ல இருக்கிறார். இதற்காக, அமெரிக்க சரக்கு கப்பல் மூலம் ஹெலிகாப்டர்கள் இந்தியா கொண்டுவரப்பட்டு, தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்