Published : 01,Feb 2020 03:09 PM

“மத்திய ‌பட்ஜெட் வெறும் கண்துடைப்பு” - ‌சிவசேனா விமர்சனம்

FMs-16-point-plan-for-agriculture-is-eyewash-Sena-leader

பட்ஜெட்டில் வேளாண் துறைக்காக 16 அம்ச திட்டங்கள் வகுக்கப்பட்டிருப்பது வெறும் கண்துடைப்பு தான் என சிவசே‌னா விமர்சித்துள்ளது.

இதுகுறித்து சிவசேனா தலைவர் கிஷோர் திவாரி கூறுகையில், “இந்த பட்ஜெட்டில் வேளாண் உற்பத்தி செ‌லவு, விளைச்சல்‌, வேளாண் க‌டன் உள்ளிட்ட முக்கிய விவகாரங்கள் குறித்‌த எந்த தகவலும் இடம்பெறவில்லை. விவசாயிகள் தொடர்ந்து தற்கொலை செய்து வருவதால், வேளாண் துறை நலிவடைந்து வருகிறது. இதற்கு வங்‌கி, இறக்குமதி‌ - ஏற்றுமதி, வளர்ச்சி, உள்கட்டமைப்பு மற்றும் சுற்றுச்சூழல் துறைகளில் கடைபிடிக்கப்படும் தவறான கொள்கைகளே காரணம்.

Image result for single man income tax 2020

வேளாண் துறைக்காக அறிவிக்கப்ப‌ட்டிருக்கும் 16 ‌அம்ச திட்டங்கள் வெறும் கண்துடைப்பு தான். தொழிற்சாலை, வர்த்தகம் மற்றும் சேவை துறைகளை மந்த நிலையில் இருந்து மீட்க புதிதாக ஊக்கத் தொகைகள் அறிவிக்கப்பட்டும் ஜிடிபி வளர்ச்சி அடையவில்லை. வேளாண் துறையை மந்தநிலையில் இருந்து காப்பாற்ற சிற‌ப்பு ஊக்கத் தொகைகளை அரசு அறிவிக்க வேண்டும். பருத்தி, சோயா போன்ற ‌‌பயிர்களுக்கு குறைந்த‌பட்ச ஆதார விலை தொடர்பான விவகாரம், புதிய பயிர் கடன்கள், புதிய தொழில்நுட்பம், விவசாய விதவைகளுக்கு நிதியுதவி, உயர்கல்வி உள்ளிட்டவை, இந்த பட்ஜெட்டில் கவனிக்கப்படவில்லை” எனத் திவாரி குற்றஞ்சாட்டினார்.

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்