[X] Close

தமிழகத்தில் பயங்கரவாதிகளுடன் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் 3 பேர் கைது

தமிழ்நாடு

Connection-with-Terrorist--3-arrested-in-tamilnadu

சிறப்பு எஸ்.ஐ வில்சன் கொலை வழக்கு மற்றும் ஐ.எஸ். பயங்கரவாதிகளுடன் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் 3 பேரை காவல்துறையினர் மடக்கி பிடித்தனர்.


Advertisement

ராமநாதபுரம் மாவட்டம் தேவிப்பட்டினத்தில் உள்ள தனியார் பள்ளி மைதானத்தில் சந்தேகப்படும்படி 4 பேர் பேசிக் கொண்டிருப்பதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனையடுத்து காவல்துறையினர் அங்கு சென்றபோது 4 பேரும் தப்பியோட முயன்றனர். அவர்‌ளை துரத்திய காவல்துறையினர் புறாக்கனி என்ற பிச்சைக்கனி, அமீர், முகமது அலி ஆகிய 3 பேரை பிடித்தனர். ஷேக் தாவூத் என்பவர் தப்பியோடினார்.

image


Advertisement

சிறப்பு எஸ்.ஐ வில்சன் கொலையில் தொடர்புடைய அப்துல் சமீமுக்கு பண உதவி செய்ததாகவும், தாங்கள் சேர்ந்த இயக்கத்திற்கு ஆட்கள் சேர்க்க உதவிய முகமது ரிபாஸ் குறித்து விவாதித்ததாகவும் கூறப்படுகிறது. அவர்களிடம் இருந்து சில புத்தகங்கள், 3 செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டன. அவர்களின் செல்போனை ஆய்வு செய்தபோது வாட்ஸ்அப் குழுக்கள் மூலம் அவதூறு பரப்பியதும் தெரியவந்ததாக காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.

image

இவர்கள் 3 பேர் மீதும் 9 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிந்து தேவிப்பட்டினம் காவல்துறையினர் கைது செய்தனர். இதனிடையே தப்பியோடிய சேக் தாவூத் மீது ஏற்கெனவே என்.ஐ.ஏ வழக்கும், பயங்கரவாதிகளுடன் தொடர்பு உள்ளதாகவும் காவல்துறையினர் தெரிவிக்கின்றனர். மேலும் அவர் தமிழகம் மற்றும் கேரளாவில் பயங்கரவாத அமைப்புக்கு ஆள்தேர்வு செய்து வந்ததாகவும் காவல்துறை தரப்பில் கூறப்படுகிறது.


Advertisement

Advertisement

Advertisement
[X] Close