[X] Close

"எங்க ஏரியா... உள்ளே வரவேண்டாம்" - கிரண்பேடிக்கு நாராயணசாமி எச்சரிக்கை

Cold-War--Between-Narayanasamy-Lt-Governor-Kiran-Bedi

ஆளுநர் அவருக்கான அதிகாரத்திற்கு உட்பட்டு செயல்படவில்லை என்றால் அதற்கான விளைவுகளை அவர் சந்திக்க நேரிடும் என முதலமைச்சர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.

யாருக்கும் தலையாட்டி பொம்மையாக இருக்கவில்லை என்று வாட்ஸ் ஆப்பில் கிரண்பேடி பதிவிட்ட விவகாரம் புதுச்சேரி சட்டப்பேரவையில் இன்று எதிரொலித்தது. துணைநிலை ஆளுநரின் செயல்பாடுகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்று அவையில் காங்கிரஸ், திமுக, அதிமுக உறுப்பினர்கள் போர்க்கொடி உயர்த்தினர். விதிமுறைகளுக்கு புறம்பாக செயல்படும் கிரண் பேடியை திரும்பப் பெறுமாறு மத்திய அரசை வலியுறுத்த வேண்டும் என்று அனைத்துக்கட்சி உறுப்பினர்களும் வலியுறுத்தினர். தவறினால், குடியரசுத் தலைவர் தேர்தலில் பங்கு பெற மாட்டோம் என்று தீர்மானம் நிறைவேற்றி மத்திய அரசுக்கு அனுப்ப வேண்டும் என்றும் அவர்கள் கூறினர். 

இதற்குப் பதிலளித்த முதலமைச்சர் நாரரயணசாமி, புதுச்சேரியில் துணைநிலை ஆளுநருக்கு தனிப்பட்ட அதிகாரம் கிடையாது என்றும், அமைச்சரவை எடுக்கும் முடிவிற்கு ஒப்புதல் தருவது மட்டுமே துணைநிலை ஆளுநரின் வேலை என்றார். ஆளுநருக்கு மக்கள் மீது அக்கறையில்லை எனவும், அவர் விளம்பரத்திற்காக செயல்படுகிறார் எனவும் நாராயணசாமி குற்றஞ்சாட்டினார். மேலும் கிரண்பேடி தான் ஒரு துணைநிலை ஆளுநர் என்பதை மறந்து தரம் தாழ்ந்து செயல்படுவதாக கூறிய அவர், அமைச்சரவையின் அனுமதியில்லாமல் புதுச்சேரியில் உள்ள அரசு அதிகாரிகள் துணைநிலை ஆளுநரை சந்திக்க கூடாது எனவும் பேரவையில் பரபரப்பான உத்தரவையும் வெளியிட்டார். துணைநிலை ஆளுநர் தன்னுடைய அதிகார எல்லையை மீறி செயல்பட்டால் அதற்கான விளைவுகளை சந்திக்க நேரிடும் என நாராயணசாமி அப்போது எச்சரிக்கை விடுத்தார். 
 


Advertisement
Advertisement:

Advertisement

Advertisement
[X] Close