Published : 08,Jan 2020 12:20 PM

“மீன் சாப்பிட்டால் மாரடைப்பு வராது”- அமைச்சர் ஜெயக்குமார்

Minister-Jayakumar-has-said-that-eating-fish-will-not-cause-a-heart-attack

மீன் ஒரு சிறந்த உணவு என்றும் அதை அதிகமாக சாப்பிட்டால் மாரடைப்பு, கண் பார்வை கோளாறு, தோல், புற்றுநோய் உள்ளிட்ட எந்த பிரச்னைகளும் வராது என தமிழக மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

Image result for chennai fish market

சட்டப்பேரவையில் பேசிய காட்டுமான்னார்கோயில் உறுப்பினர் முருகுமாறன், வீராணம் ஏரியில் புதிய மீன் வகைகளை வளர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினார். இதற்கு பதிலளித்து பேசிய மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார், கட்லா, ரோகு, ஜெயந்தி ரோகு, கெண்டை உள்ளிட்ட மீன்குஞ்சுகள் இருப்பு வைக்கப்பட்டு வளர்க்கப்பட்டு வருவதாகவும், வீராணம் ஏரியில் புதிய ரக மீன்வகைகளை வளர்க்க அரசு நடவடிக்கை எடுக்கும் என்றும் தெரிவித்தார்.

Image result for chennai fish market

மேலும், தமிழகத்தில் இருந்து 5 லட்சம் டன் மீன்கள் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டு வருவதாகவும், மீன் வளர்ப்பு தொழிலுக்கு அரசு மானியம் வழங்க தயாராக உள்ளது எனவும் அமைச்சர் தெரிவித்தார்.

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்