வாழ்வின் மிகச்சிறந்த புத்தாண்டு இதுதான் என்று நடிகர் சதீஷ், அவரது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
‘சிறுத்தை’ சிவா இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் புதிய படம் ஒன்றில் நடித்து வருகிறார். அதற்கான படப்பிடிப்பு ஹைதராபாத் ராமோஜி ராவ் ஃபிலிம் சிட்டியில் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்தப் படத்தின் முதல் நாள் படப்பிடிப்பில் படத்திற்கான பாடல் காட்சி எடுக்கப்பட்டதாக தகவல் வெளியானது. அதனையடுத்து குஷ்பு, மீனா ஆகிய இருவரும் இந்தப் படப்பிடிப்பில் பங்கேற்று நடித்து வருகின்றனர்.
இந்நிலையில், சில நாட்களுக்கு முன்பு ‘தலைவர் 168’ படத்தில் ரஜினிகாந்துடன் இணைந்து காமெடி நடிகர் சதீஷ் நடிக்க இருப்பதாக அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளியானது. அதனை அடுத்து சதீஷ், தனது ட்விட்டர் பக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த்துடன் இணைந்து எடுத்துக் கொண்ட புகைப்படம் ஒன்றை பதிவிட்டுள்ளார்.
மேலும் அவர் தன் பதிவில், “வாழ்வின் மிகச்சிறந்த புத்தாண்டு என் தலைவருடன். உங்களைப் பார்த்துதான் வளர்ந்தோம். இன்று உங்களுடனேயே இருக்கிறோம். என்றும் உங்களுடன் இருப்போம். உங்கள் அனைவருக்கும் எனது அன்பு” எனத் தெரிவித்துள்ளார்.
இந்தப் படத்தில் இவரைத் தவிர்த்து சூரி, பிரகாஷ் ராஜ் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். ரஜினி படம் ஒன்றிற்கு முதன்முறையாக, டி இமான் இசையமைத்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
Loading More post
‘பாரத் மாதா கி ஜே!’ - ‘கலைஞர் வாழ்க!’ - நேரு விளையாட்டு அரங்கை அதிரவைத்த கோஷங்கள்!
’வரியை சமமாக பகிர்ந்தளிப்பதே கூட்டாட்சி’ - பிரதமர் முன்னிலையில் முதல்வர் பேச்சு!
முக்கிய கட்டத்தில் தவறவிட்ட கேட்ச்சால் எழுந்த விமர்சனம் - கவுதம் கம்பீர் பகிர்ந்த பதிவு
365 கோடி செலவில் மேம்படுத்தப்படவுள்ள காட்பாடி ரயில் நிலையம் - அடிக்கல் நாட்டினார் பிரதமர்
தமிழகத்தில் ரூ.31,400 கோடி மதிப்பீட்டிலான நலத்திட்டங்களை தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி
ரஷீத் கானின் அந்த 4 ஓவர்களும்; ராஜஸ்தான் ராயல்ஸ் கோட்டைவிட்ட இடங்களும்!
ஐபிஎல் பிளே ஆஃப் போட்டி: மழை பெய்தால் யாருக்கு சாதகம்? - விதிகள் என்ன?
வலி நிறைந்த வாழ்வின் தடங்கள்... எப்போது ஆறும் கேரள விஸ்மயா கடந்து சென்ற முட்பாதையின் ரணம்?
தினேஷ் கார்த்திக் இம்முறையும் பெஞ்ச் தானா? அணி தேர்வில் இப்படியொரு இடியாப்ப சிக்கலா!