[X] Close

‘விபத்தில் உயிரிழந்தார் காந்தி’ - ஒடிசா அரசின் கையேட்டால் எழுந்த சர்ச்சை

Mahatma-Gandhi-died-due-to-accidental-reasons--claims-Odisha-govt-school-booklet--kicks-up-row

மகாத்மா காந்தியின் இறப்பு குறித்த செய்தியை சர்ச்சைக்குரிய வகையில் பள்ளிப் பாடப் புத்தகத்தில் வெளியிட்டுள்ளதாக ஒடிஷா மாநில அரசு மீது குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

ஒடிசா மாநில அரசு பள்ளிக்களுக்காக ‘ஆமா பாபுஜி’ என்ற இரண்டு பக்க கையேட்டை வழங்கி இருக்கிறது. அதாவது ‘நமது பாபுஜி: ஒரு பார்வை’  என்ற சிறு கையேடுதான் அது. அந்தக் கையேட்டில் காந்தி இறப்பு குறித்த தகவல் இடம்பெற்றுள்ளது. அதில் மகாத்மா காந்தி ஒரு விபத்தில் இறந்ததாக குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் அந்த விபத்து தொடர்ந்து குறிபார்க்கப்பட்டதாகவும் இறுதியில் அவர் ஜனவரி மாதம் 30 தேதி, டெல்லியில் உள்ள பிர்லா மாளிகையில் இறந்ததாகவும் கூறப்பட்டுள்ளது. 


Advertisement

ஜனவரி மாதம் நாதுராம் கோட்சே துப்பாக்கியால் சுட்டதன் விளைவால் காந்தி இறந்தார் என்பதே வரலாற்று உண்மை. ஆனால் அதற்கு மாறாக ‘விபத்தில்’ இறந்தார் எனக் கூறியுள்ள இந்தக் கையேடு குறித்து இப்போது சர்ச்சை எழுந்துள்ளது. இது ஒரு ‘மன்னிக்க குடியாத தவறு’. இதற்கு முதல்வரே பொறுப்பு. ஆகவே ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக் மன்னிப்புக் கேட்க வேண்டும் என்று முன்னாள் அமைச்சரும் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவருமான நரசிங்ஹ மிஸ்ரா தெரிவித்துள்ளார். உடனடியாக இந்தக் கையேட்டை திரும்ப பெற வேண்டும் என்று சில எதிர்க்கட்சியினர் வலியுறுத்தியுள்ளனர்.   

மேலும், பிஜு ஜனதா தளம் (பிஜேடி) அரசு காந்தி வெறுப்பாளர்களுக்கு சாதகமாக இருப்பதாக குற்றம் சாட்டிய மிஸ்ரா, மகாத்மா காந்தியைக் கொன்றது யார், அவர் படுகொலை செய்யப்பட்ட சூழ்நிலைக்கு யார் காரணம் என்பதை அறிய குழந்தைகளுக்கு எல்லா உரிமையும் உள்ளது என்று கூறியுள்ளார். "தேசத் தந்தையின் மரணம் அவரது வெறுப்பாளர்களை மகிழ்விக்கும் வகையில் பாடத்திட்டத்தில் வைக்கப்பட்டுள்ளது" என்றும் அவர் கடுமையாக விமர்சித்துள்ளார்.

"கோட்ஸே அனுதாபிகள் பாடத்திட்டத்தை எழுதிய எழுத்தாளரையும் வெளியீட்டாளரையும் நிர்பத்தித்துள்ளனர்" என்று கூறியுள்ள சமூக ஆர்வலர் பிரஃபுல்லா சமந்தாரா, துல்லியமான தகவல்களைக் கொண்ட திருத்தப்பட்ட கையேட்டை மாணவர்கள் மத்தியில் மறுபகிர்வு செய்ய வேண்டும் என்று வலியுறுத்தினார்.

Advertisement:

Advertisement

Advertisement
[X] Close