சீனா உள்ளிட்ட நாடுகளுடனான தடையற்ற வர்த்தக உடன்பாட்டில் சேருவதற்கு இந்தியா மறுப்பு தெரிவித்துள்ளது.
ஆசியான் - இந்தியா உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக தாய்லாந்து தலைநகர் பாங்காக் சென்ற பிரதமர் மோடி, ஆசியான் மற்றும் சீனா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து ஆகிய 15 நாடுகளை இணைக்கும் தடையற்ற வர்த்தக உடன்பாடு தொடர்பான பேச்சுவார்த்தையில் கலந்துகொண்டார். அப்போது இந்தியாவின் முக்கிய பிரச்னைகளுக்கு தீர்வு காணப்படாததால், இந்த உடன்பாட்டில் இணைய முடியாது என பிரதமர் மோடி திட்டவட்டமாக கூறியதாக தெரிகிறது.
தற்போது இருக்கும் உடன்பாட்டை அப்படியே ஏற்றுக் கொண்டால், இந்தியர்களின் வாழ்வாதாரம் பெருமளவு பாதிக்கப்படும் என பிரதமர் தெரிவித்துள்ளார். தடையற்ற வர்த்தக உடன்பாட்டில், அடிப்படை கொள்கைகள் முழுமையாக பிரதிபலிக்கவில்லை என்றும், இது தொடர்பாக இந்தியா தெரிவித்த கவலைகளுக்கு தீர்வு எட்டப்படாதது மிகுந்த அதிருப்தியை ஏற்படுத்தியிருக்கிறது என்றும் கூறினார்.
எனவே, இத்தகைய சூழலில் தடையற்ற வர்த்தக உடன்பாட்டில் இந்தியா இணைவது என்பது சாத்தியமற்றது என்றும் பிரதமர் மோடி தெரிவித்தார். இந்திய விவசாயிகள், வர்த்தகர்கள், தொழில்துறையினர் ஆகியோரது நலனை கருத்தில் கொண்டே இந்த முடிவு எடுக்கப்பட்டிருப்பதாகவும் பிரதமர் மோடி பேசியுள்ளார்.
அமெரிக்காவுடனான வர்த்தக போரால் ஏற்பட்ட பாதிப்பை சரிக்கட்டும் வகையில், ஆசியான் நாடுகளுடன் தடையற்ற வர்த்தக உடன்பாட்டை ஏற்படுத்திக் கொள்வதற்கு சீனா அதிக அழுத்தம் கொடுத்து வருவதாக கூறப்படுகிறது. இந்த உடன்பாடு முழுமையாக சீனாவின் நலன் சார்ந்து அமைந்திருப்பதாகவும் தெரியவந்திருக்கிறது. இதனாலேயே இந்த ஒப்பந்தத்தில் இணைய இந்தியா மறுப்பு தெரிவித்துள்ளது.
Loading More post
”அடுத்த சீசனில் இந்த இளம் பவுலர் நிச்சயம் சிறப்பாக விளையாடுவார்” - தோனி சொன்ன அந்த வீரர்?
‘நான் சொன்ன கருத்தைத்தான் பிரதமரும் எதிரொலிக்கிறார்‘ - கிச்சா சுதீப்பின் புதிய கமெண்ட்!
மாநிலங்களவை தேர்தல் வேட்பாளர்களை தேர்வுசெய்வதில் அதிமுகவில் நீடிக்கும் இழுபறி!
இம்ரான் தாஹிரின் மிகப்பெரிய சாதனையை சமன் செய்தார் சாஹல்! என்ன சாதனை?
லக்னோவில் 10 நாட்களுக்கும் மேலாக தாயின் சடலத்துடன் வசித்த மகள்! என்ன காரணம்?
எளியோரின் வலிமைக் கதைகள் 31: ஊரையே சுத்தம் செய்தாலும் வாசமில்லா வாழ்க்கை
தோனி மட்டும் இன்னும் கொஞ்சம் வேகமாக ஆடியிருந்தால்.. சிஎஸ்கே வெற்றியை தட்டிப்பறிந்த அஸ்வின்
அரசு காப்பீட்டு திட்டத்தில் 4 ஆண்டுகளில் ரூ.2,368 கோடி பயன்படுத்தவில்லை! அதிர்ச்சி தகவல்
கல்குவாரி விபத்தால் உருக்குலைந்த குடும்பம்.. கைக்குழந்தையுடன் தவிக்கும் இளம்பெண்!