[X] Close

நடிப்பில் மிரட்டும் ‘துருவ்’.. எப்படி இருக்கிறது ’ஆதித்யா வர்மா’ ட்ரைலர்..!

Adithya-Varma---Trailer

சில கதைகளை மட்டுமே காலத்திற்கு ஏற்ப மாற்றம் செய்து தொடர்ந்து சினிமாவாக எடுத்துக் கொண்டே இருக்க முடியும். அப்படியொரு அமர காதல் கதை தான்  தேவதாஸுடையது. உலகம் உள்ள மட்டும் இந்தக் காதல் கதை தொடர்ந்து வெவ்வேறு கலை வடிவங்களுக்குள் தன்னை பொறுத்திக் கொள்ளும்.

அந்த வகையில் சந்தீப் ரெட்டி வங்கா இயக்கிய ’அர்ஜூன் ரெட்டி’ திரைப்படம் தெலுங்கு சினிமாவின் மீது பரவிக்கிடந்த மசாலா சாயத்தை காதலால் கழுவியது. விஜய் தேவரகொண்டா சாலினி பாண்டே இருவரின் கெமிஸ்ட்ரி அவ்வளவு கச்சிதம். ஷாருக்கான் கஜோலுக்கு பிறகு இந்திய சினிமாவின் அழகான ஜோடி என கொண்டாடும் அளவிற்கு அவர்களுக்குள் பத்து பொருத்தமும் பக்காவாக இருந்தது.


Advertisement

இந்த திரைப்படதை தமிழில் ’ஆதித்யா வர்மா’ என்ற பெயரில் இயக்குநர் கிரீசயா இயக்கியிருக்கிறார், இதில் அர்ஜுன் ரெட்டி கதாபாத்திரத்தில் சியான் விக்ரமின் மகன் துருவ் நடித்திருக்கிறார். அதன் ட்ரைலர் தற்போது வெளியாகியுள்ளது.

அர்ஜூன் ரெட்டியிடம் இருந்த ஆக்ரோசம் காதல் என எல்லாம் துருவிற்கு பொருந்தியிருக்கிறது. மருத்துக்கல்லூரி மாணவனாக வரும் துருவ் தனது ஜூனியர் பெண்ணான மீராவை ராக் செய்யும் காட்சியில் அவரது முகத்தில் அப்படியே அப்பாவின் சாயல்.

ஆதித்யாவின் தீவிரமான காதலானது சாதிப் பிடிவாதம் கொண்ட பெண்ணின் தந்தையால் முறிந்து போகிறது. டாக்டர் ஆதித்யா குடிகாரனாகிறார். குடித்துவிட்டு அறுவை சிகிச்சை செய்ததற்காக விசாரிக்கப்படுகிறார் ஆதித்யா. ட்ரைலரின் துவக்கத்தில் “ஆதித்யாவிற்கு பயந்து நர்ஸே லிகர் சப்ளே பண்ணி இருக்காங்க” என்று வரும் வசனம் நாயகனின் நிலையை அப்படியே சொல்கிறது.

”கோவத்தை கண்ட்ரோல் செய்ய முடியாத மனுஷன் ஒரு சர்ஜிகல் ப்லேட பிடிச்சா அது மர்டருக்கு சமம்.” என்று வரும் மற்றுமொரு வசனம் ஷார்ப்., ரவிகே சந்திரனின் ஒளிப்பதிவு இதம்.

அதிரடி காதலன், குடிகார டாக்டர், கட்டுப்பாடில்லாத கோவக்காரன் என கலவையான கதாபாத்திரத்தில் வரும் துருவிற்கு இப்படம் நல்ல ஓப்பனிங். ஆனால் மீராவாக வரும் பனிடா சாந்து, சாலினி பாண்டேவை ரீப்ளேஸ் செய்வார் என்று தோன்றவில்லை, கதையை தாங்கும் உருவம் அவருக்கு இல்லை, அவர் ட்ரைலரில் தோன்றும் சில காட்சிகளில் கூட கதைக்குப் பொருத்தம் இல்லை, ஆனால் தனது நடிப்பின் மூலம் சாலினி பாண்டே ஏற்படுத்திய தாக்கத்தை தமிழில் இவரும் கொடுப்பார் என நம்புவோம். E4 Entertainment தயாரித்திருக்கும் இப்படம் சர்வ நிச்சயமாக தமிழ் சினிமா ரசிகர்களை காதலால் கட்டிப் போடும்., விக்ரமின் மகன் துருவ் பதினாரு அடி பாய வாழ்த்துவோம்…

Advertisement:

Advertisement

Advertisement
[X] Close