Published : 18,Oct 2019 05:03 PM

இளைஞர்களுடன் உற்சாகமாக கிரிக்கெட் ஆடிய ராகுல் - வீடியோ 

Rahul-Gandhi-Plays-Cricket-As-Chopper-Forced-To-Land-In-Haryana

சிறுவர்களுடன் கிரிக்கெட் விளையாடி மகிழ்ந்த ராகுல் காந்தியின் வீடியோ ஒன்று பலரையும் கவர்ந்து வருகிறது.

ஹரியானா மாநிலத்தில் வரும் 21ஆம் தேதி சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது. இதனால், அங்கு காங்கிரஸ், பாஜக உள்ளிட்ட கட்சிகள் தீவிர பரப்புரையில் ஈடுபட்டுள்ளன. காங்கிரஸ் கட்சியின் இடைக்கால தலைவரான சோனியா காந்தி அங்குள்ள மகேந்திரஹர் பகுதியில் நடைபெறும் தேர்தல் பரப்புரை பேரணி மற்றும் பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்வார் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. 

ஆனால் சோனியா காந்தியின் பரப்புரை திடீரென ரத்து செய்யப்பட்டுள்ளது. அவருக்குப் பதிலாக ராகுல் காந்தி இக்கூட்டத்தில் கலந்து கொள்வார் என அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் பரப்புரையில் பங்கேற்பதற்காக ராகுல் காந்தி ஹரியான சென்றிருந்தார். அங்கு நிலவிய மோசமான வானிலை காரணமாக ரெவாரிக்கு செல்வதற்கு 100 கிலோ மீட்டர் முன்பாகவே ஹெலிக்காப்டர் தரையிறக்கப்பட்டது. அப்போது அங்கே இருந்த தனியார் கல்லூரி மைதானத்தில் சிறுவர்கள் மற்றும் இளைஞர்கள் கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருந்தனர். 

 

அவர்களைப் பார்த்த ராகுல்காந்தி, அந்த இளைஞர்களுடன் கிரிக்கெட் விளையாடினார். மிக உற்சாகமாக இளைஞர்கள் வீசிய பந்துக்களை அவர் மிக எளிதாக எதிர்கொண்டார். இது சம்பந்தமான வீடியோ ஒன்றை ஏஎன்ஐ செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ளது. அது தற்போது வைரலாக பரவி வருகிறது. 

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்