Published : 18,Sep 2019 08:15 AM
"பிகில்" படத்தின் "உனக்காக" பாடல் ! இன்று மாலை ரிலீஸ்

பிகில் படத்தின் உனக்காக பாடல் இன்று மாலை வெளியிடப்படும் என படக்குழு அறிவித்துள்ளது
தெறி, மெர்சல் படங்களைத் தொடர்ந்து இயக்குநர் அட்லீயுடன் விஜய் மூன்றாவது முறையாக கைகோர்த்துள்ள படம் ‘பிகில்’. ஏஜிஎஸ் எண்டர்டெய்ன்மெண்ட் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தில் கால்பந்து பயிற்சியாளராக விஜய் நடித்துள்ளார். இப்படத்தில் நயன்தாரா, நடிகர் விவேக், டேனியல் பாலாஜி, யோகி பாபு, கதிர், பாலிவுட் நடிகர் ஜாக்கி செஷாஃப் உள்பட பலர் நடித்துள்ளனர். படப்பிடிப்பு முடிந்துவிட்ட நிலையில் டப்பிங் வேலைகள் நடைபெற்று வருகின்றன. இந்தப்படம் வரும் தீபாவளிக்கு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் அதிகாரப்பூர்வ தேதி இன்னும் அறிவிக்கப்படவில்லை
படத்தின் பாடல்கள் வரும் 19ம் தேதி வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது. இந்நிலையில் இன்று மாலை 4.30 மணிக்கு 'உனக்காக' பாடல் வெளியாகும் என அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஏஆர்ரகுமான் இசையில் உருவான சிங்கப்பெண்ணே பாடல் ஏற்கெனவே ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ள நிலையில் உனக்காக பாடலுக்காகவும் ரசிகர்கள் எதிர்பார்ப்புடன் காத்திருக்கின்றனர்.