[X] Close

நாஞ்சில் சம்பத்தை கட்சியிலிருந்து நீக்க வேண்டும்: கே.பி.முனுசாமி காட்டம்

Dismiss-Nanjil-Sampath-from-AIADMK-says-KP-Munusamy

மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவை விமர்சனம் செய்த நாஞ்சில் சம்பத்தை கட்சியிலிருந்து நீக்க வேண்டும் என்று அதிமுக புரட்சி தலைவி அம்மா அணியின் நிர்வாகியும், முன்னாள் அமைச்சருமான கே.பி.முனுசாமி கூறியுள்ளார்.


Advertisement

அரசியல் அனாதையாக நடுரோட்டில் நின்ற நாஞ்சில் சம்பத்தை கட்சியில் சேர்த்து, கட்சியின் பிரச்சார அணியின் துணைச் செயலாளர் பொறுப்பு கொடுத்த ஜெயலலிதாவையே விமர்சனம் செய்து வருகிறார். அவர் துரோகி என்று சொல்லும் ஓ.பன்னீர்செல்வமும், நத்தம் விஷ்வநாதனும்தான் அவருக்கு வழங்கப்பட்ட பிரச்சார வாகனத்தை வாங்கிக் கொடுத்தனர். தனது பெண்ணுக்கு திருமணம் செய்ய வேண்டும் என்று சொன்னபோது, ஜெயலலிதா உத்தரவின் பேரில் அவர்கள் இருவரும்தான் திருமணத்திற்கான உதவிகளை செய்தனர். இப்போது அவர்களையே துரோகி என்கிறார் சம்பத். அவர் மருத்துவமனையில் உயிருக்கு போராடியபோது மருத்துவ உதவி, மகனுக்கு மெடிக்கல் சீட் என்று சகலமும் செய்து கொடுத்தவர், ஜெயலலிதா. இப்போது அவரையும் விமர்சனம் செய்கிறார் என்று கே.பி.முனுசாமி கூறினார்.

மேலும், ஒவ்வொரு ஊரிலும் பிரச்சாரம் செய்வதற்கு ஒரு விலை நிர்ணயித்து, தனது ஒவ்வொரு சொல்லையும் வருமானமாக மாற்றிக் கொண்டார். ஊரில் ஒரு பழமொழி சொல்லுவார்கள், கூலிக்கு மாரடிப்பது என்று. அதுபோல அவர் கூலிக்கு மாரடிப்பவர். இப்போது ஜெயலலிதாவையும், அவரின் உண்மைத் தொண்டர்களையும் இப்படி விமர்சிப்பதற்கு சசிகலாவிடமும், தினகரனிடமும் எவ்வளவு கூலி வாங்கினார் என்று தெரியவில்லை. உடனடியாக நாஞ்சில் சம்பத்தை கட்சியிலிருந்து நீக்குவதற்கு எடப்பாடி பழனிச்சாமி நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், டிடிவி தினகரன், சசிகலா இருவரையும் கட்சியை விட்டு நீக்கி தேர்தல் ஆணையத்தின் பிரமான பத்திரத்தில் தாக்கல் செய்ய வேண்டும் என்று கே.பி.முனுசாமி கூறினார்.


Advertisement

Advertisement

Advertisement
[X] Close