[X] Close

மோடி தமிழில் டிவிட்

modi-tweets-in-tamil

இலங்கை செல்லும் பிரதமர் மோடி, தமிழில் டிவிட் செய்துள்ளார்.

ஐக்கிய நாடுகள் அறிவித்துள்ள புத்த பூர்ணிமா (வெசாக்)கொண்டாட்டங்கள் நாளை முதல் 14-ம் தேதி வரை கொழும்பு நகரில் 3 நாட்கள் நடக்கிறது. இதில் பிரதமர் மோடி சிறப்பு விருந்தினராக கலந்து கொள்கிறார். இதற்காக இன்று அவர் கொழும்பு செல்கிறார். இந்த விழாவில் உலகம் முழுவதும் இருந்து 400 தலைவர்கள் கலந்துகொள்ள இருக்கின்றனர். இலங்கை தலைவர்களும் கலந்து கொள்கின்றனர்.

தனது இலங்கை பயணம் குறித்து தமிழில் டிவிட் செய்துள்ளார் மோடி. அவர், ’இரண்டு நாள் விஜயத்தை மேற்கொண்டு இலங்கையில் இருப்பேன். இதன் போது வெசாக் தினக் கொண்டாட்டங்கள் மற்றும் ஏனைய நிகழ்வுகளில் இணைந்து கொள்வேன்’ என்று கூறியுள்ளார்.


Advertisement
Related Tags : modimodi

Advertisement

Advertisement
[X] Close