[X] Close

அனுஷ்காவை ஸ்லிம்மாக்க ரூ.2 கோடி! பாகுபலி 2 டீம் தாராளம்

two-crores-for-anushkas-makeover

நடிகை அனுஷ்காவை இளமையாக காண்பிக்க, 2 கோடி ரூபாயை ’பாகுபலி 2’ பட டீம், செலவழித்துள்ள தகவல் இப்போது தெரியவந்துள்ளது.

எஸ்.எஸ். ராஜமவுலி இயக்கத்தில் பிரபாஸ், ராணா, அனுஷ்கா, தமன்னா, ரம்யா கிருஷ்ணன் உட்பட பலர் நடித்துள்ள படம், ’பாகுபலி 2’. இந்திய சினிமா

வரலாற்றில் மிகப்பெரிய வசூல் சாதனை படைத்திருக்கும் இந்தப் படத்தில் அனுஷ்கா தேவசேனாவாக நடித்திருந்தார். அவரை இளமையாக காண்பிக்க, படக்குழு 2


Advertisement

கோடி ரூபாயை செலவழித்திருக்கிறது. அதாவது சமீபத்தில் ஷாரூக் கான் இரட்டை வேடத்தில் நடித்து இந்தியில் வெளியான படம், ‘ஃபேன்’. இந்தப் படத்தில்

ஒரு ஷாரூக் கான் மிகவும் இளமையாகக் காணப்பட்டார். அவரை இளமையாக காண்பிக்க, ஷாரூக்கானின் ரெட் சில்லீஸ் நிறுவனம் சிறப்பு கிராபிக்ஸ்

வேலையை செய்தது. ரெட் சில்லீஸ் நிறுவனத்தின் விஎஃப்எக்ஸ் ஸ்டூடியோவில் செய்யப்பட்ட இந்த கிராபிக்ஸ் செயல் முறையில் அனுஷ்காவையும்

இளமையாகக் காண்பிக்க படக்குழு முடிவு செய்தது.

ஏனென்றால் ’இஞ்சி இடுப்பழகி’ படத்துக்காக, உடல் எடையை ஏற்றிய அனுஷ்காவால் அதை குறைக்க முடியவில்லை. எவ்வளவோ முயன்றும் உடல் ஏறியதே

தவிர குறையவில்லை. பிறகு ராஜமவுலி அப்படியே இருக்கட்டும் என்று விட்டுவிட்டார். ஆனால் திரையில் அப்படியே குண்டாக காண்பித்தால் நன்றாக இருக்காது

என்பதால் ஷாரூக்கானின் ரெட் சில்லீஸ் நிறுவனத்தில் சிறப்பு கிராபிக்ஸ் வேலைகள் செய்ய முடிவு செய்தார். அங்கு அனுஷ்காவை ஒல்லியாக்கி உள்ளனர்.

இதற்காக செய்யப்பட்ட செலவு மட்டும் ரூ.2 கோடி.

Advertisement:

Advertisement

Advertisement
[X] Close