[X] Close

கருணாநிதி உடல்நிலையில் நல்ல முன்னேற்றம்: டிகேஎஸ் இளங்கோவன் தகவல்

Good-progress-in-Karunanidhi-Health-condition

திமுக தலைவர் கருணாநிதியின் உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக திமுக எம்பியும் செய்தித் தொடர்பாளருமான டி.கே.எஸ்.இளங்கோவன் தெரிவித்துள்ளார்.


Advertisement

இதுகுறித்து புதியதலைமுறையிடம் பேசிய அவர், ஜூன் 3-ஆம் தேதி தமது பிறந்த நாளன்று வழக்கம் போல, கட்சியின் நிர்வாகிகளையும், தொண்டர்களையும் அவர் சந்திக்க வாய்ப்பிருப்பதாகவும் தெரிவித்தார். கடந்த 6 மாதங்களுக்கும் மேலாக திமுக தலைவர் கருணாநிதி முதுமை காரணமாக ஏற்பட்ட உடல்நலிவு காரணமாக ஓய்வெடுத்து வருகிறார். இதனால், கட்சி நிர்வாகிகளோ, தொண்டர்களோ அவரைச் சந்திக்க முடியவில்லை.


Advertisement

Advertisement

Advertisement
[X] Close