Published : 20,Apr 2019 06:42 AM

ஆஸி., நியூசி. கிரிக்கெட் வீராங்கனைகள் திருமணம்

Women-cricketers-from-Australia--New-Zealand-tie-knot

ஆஸ்திரேலிய மற்றும் நியூசிலாந்து கிரிக்கெட் வீராங்கனைகள் திருமணம் செய்துகொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நியூசிலாந்து மகளிர் கிரிக்கெட் அணியின் ஆல் ரவுண்டர் ஹேலே ஜென்சன் (Hayley Jensen). இவர் நியூசிலாந்து அணிக்காக, 8 ஒரு நாள் போட்டி மற்றும் இருபது டி20 போட்டிகளில் விளையாடியுள்ளார். இவரும், ஆஸ்திரேலியாவில் உள்ளூர் கிரிக்கெட்டில் விளையாடி வரும் 23 வயது வீராங்கனை நிகோலா ஹன்காக்கும் (Nicola Hancock) பழகி வந்தனர்.

ஒருபால் சேர்க்கையாளரான இவர்கள், பின்னர் காதலிக்கத் தொடங்கினர். இந்நிலையில் அவர்கள் மோதிரம் மாற்றி கடந்த வாரம் திருமணம் செய்து கொண்டனர். இதில் அவர்களின் நெருங்கிய நண்பர்கள் மட்டும் கலந்துகொண்டனர். இத்தகவலையும்  புகைப்படத்தையும் சமூக வலை தளத்தில் இப்போது வெளியிட்டுள்ளனர். 

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்