சென்னை கொரட்டூரில் வருமான வரித்துறை அதிகாரிகளாக நடித்து மளிகைக்கடைகாரரிடம் மூன்று லட்சம் ரூபாய் பணம் மற்றும் வெள்ளிப் பொருட்கள் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் அரங்கேறியுள்ளது.
சென்னை கொரட்டூர் ரெட்டி தெருவில் சிவப்பிரகாசம் என்பவர் மளிகை கடை நடத்தி வருகிறார். அவரிடம் வாடகை காரில் வந்த மர்ம நபர்கள் ஐந்து பேர் வருமான வரித்துறை அதிகாரிகள் என்று கூறி தங்களை அறிமுகப்படுத்திக் கொண்டனர். அதற்கான போலி ஐடி கார்டையும் காட்டியுள்ளனர். கடை மற்றும் வீடு ஒரே இடத்தில் இருப்பதால் கடையை சோதனை செய்து பின்னர் மாடியில் இருந்த வீட்டையும் அவர்ள் சோதனை செய்துள்ளனர்.
பின்னர் வீட்டிலிருந்த மூன்று லட்சம் ரூபாய் பணம், ஐந்து கிலோ வெள்ளிப் பொருட்களை கொள்ளையடித்து அவர்கள் சென்றுவிட்டனர். கொள்ளையர்கள் போகும்போது நுங்கம்பாக்கத்தில் உள்ள வருமான வரித்துறை அலுவலகத்திற்கு வந்து முறையான கணக்கு காட்டிவிட்டு உங்கள் பணத்தை திரும்ப பெற்றுக் கொள்ளலாம் என்று கூறி விட்டு சென்றுள்ளனர்.
சிவப்பிரகாசம் நுங்கம்பாக்கம் சென்று அலுவலகத்தில் விசாரித்தபோது அதுபோன்ற நபர்கள் யாரும் இல்லை என்று தெரிவித்ததால் அதிர்ச்சியடைந்தார். பின்னர் கொரட்டூர் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அதனைத்தொடர்ந்து வழக்குப்பதிவு செய்து போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். இச்சம்பவம் கொரட்டூர் பகுதி மக்கள் பீதியடைந்தனர்.
Loading More post
கல்வித் தொலைக்காட்சியில் சிஇஓ பதவி: தகுதியும் ஆர்வமும் இருப்போர் விண்ணப்பிக்கலாம்!
'கெத்துக்காக' ரயிலின் மேற்கூரையில் ஏறிய இளைஞனுக்கு நிகழ்ந்த சோகம்... அதிர்ச்சி வீடியோ!
‘குழந்தைகளின் அலறல் கேட்டும் தாமதித்த போலீஸ்’- அமெரிக்க துப்பாக்கிச்சூட்டில் புது புகார்
பட்லரின் சதம் மட்டுமல்ல; பௌலர்கள் வியூகமும்தான் ராஜஸ்தானை வெல்ல வைத்தது!
இந்தியாவில் டெஸ்லா கார்கள் உற்பத்தி இல்லை: எலான் மஸ்க் அறிவிப்பின் காரணம் என்ன?
பட்லரின் சதம் மட்டுமல்ல; பௌலர்கள் வியூகமும்தான் ராஜஸ்தானை வெல்ல வைத்தது!
‘சேத்துமான்’ OTT திரை விமர்சனம்: உணவு அரசியலை அலசியிருக்கும் ’ஸ்ட்ராங் மேன்’!
ரஷீத் கானின் அந்த 4 ஓவர்களும்; ராஜஸ்தான் ராயல்ஸ் கோட்டைவிட்ட இடங்களும்!
ஐபிஎல் பிளே ஆஃப் போட்டி: மழை பெய்தால் யாருக்கு சாதகம்? - விதிகள் என்ன?
வலி நிறைந்த வாழ்வின் தடங்கள்... எப்போது ஆறும் கேரள விஸ்மயா கடந்து சென்ற முட்பாதையின் ரணம்?