[X] Close

குழம்பிய அம்மா: கும்மிய ரசிகர்கள்: கும்ப்ளே இப்படி பண்ணலாமா?

anil-khumble-tags-wrong-saharika-in-twitter

கிரிக்கெட் வீரர் ஜாகிர்கானின் வருங்கால மனைவி என நினைத்து மூத்த பத்திரிகையாளருக்கு அனில் கும்ப்ளே வாழ்த்து செல்லியதால் ரசிகர்கள் அதிர்ச்சியடைந்தனர்.

இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஜாகிர் கான். இவருக்கும் இந்தி நடிகை சகாரிகா காட்கேவுக்கும் திருமண நிச்சயதார்த்தம் முடிந்துள்ளது. இதுபற்றி ஜாகிர்கான் டிவிட்டரில் தெரிவித்துள்ளார். அவருக்கு முன்னாள் மற்றும் இந்நாள் கிரிக்கெட் வீரர்கள் வாழ்த்துத் தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் சகாரிகா காட்கேவுக்கு டேக் பண்ணுவதாக நினைத்துக்கொண்டு முன்னாள் கிரிக்கெட் வீரர் அனில் கும்ப்ளே, மூத்த பத்திரிகையாளர் சகாரிகா கோஷுக்கு வாழ்த்துத் தெரிவித்து டேக் பண்ணிவிட்டார். இதே போல டெல்லி டேர்டெவில்ஸ் அணியும் தவறாக அவருக்கே டேக் பண்ணிவிட்டது. இதைக் கண்டு அதிர்ச்சி அடைந்த சகாரிகா கோஷ், ‘யப்பா, சார்களா, நான் அந்த சகாரிகா இல்ல. நான் ஒரு குழந்தையோட அம்மா’ எனக் கூறியுள்ளார். இதையடுத்து ரசிகர்கள் அனில் கும்ளேவையும் டெல்லி டேர்டெவில்ஸ் அணியையும் கலாய்த்து எடுத்துவிட்டனர் டிவிட்டரில்.


Advertisement
Related Tags : anil khumble twitteranil khumble
Advertisement:

Advertisement

Advertisement
[X] Close