[X] Close

17 ஆண்டுகளுக்கு பின்பு அரசு பள்ளிக்கு கிடைத்த மின் இணைப்பு

Govt-school-gets-power-supply-after-17-years-in-kovai

கோயமுத்தூரில் உள்ள ஒரு அரசு பள்ளிக்கு 17 ஆண்டுகளுக்கு பிறகு தற்போது தான் மின் இணைப்பு கிடைத்துள்ளது

கோயமுத்தூரில் உள்ள ஆணைக்கட்டி பகுதியில் அமைந்துள்ளது பெரியநாயக்கம்பாளையம். அதன் எல்லைக்குட்பட்ட பகுதியில் நடுநிலைப்பள்ளி 17 வருடங்களாக இயங்கி வருகிறது. அந்த பள்ளியில் அருகில் உள்ள கிராமங்களைச் சேர்ந்த 40க்கும் அதிகமான மாணவர்கள் படித்து வருகின்றனர். அந்த பள்ளி வனப்பகுதிக்குள் அமைந்துள்ளதால் அங்கு மின் கம்பங்கள் அமைக்கப்படாமல் மின்சார வசதி கொடுக்கப்படாமலே இருந்து வந்துள்ளது. அந்த பள்ளி அமைந்துள்ள தடாகம் வனப்பகுதி சுற்றியுள்ள கிராமங்களில் 150க்கும் அதிகமான குடும்பங்கள் வசித்து வருகின்றன. இந்த குடும்பங்களுக்கு கடந்த 2016 ஆம் ஆண்டுதான் மின்சாரம் கிடைத்துள்ளது. இது குறித்து தி நியூஸ் மினிட் வெளியிட்டுள்ள செய்தியின்படி,


Advertisement

2016 ஆம் ஆண்டு நடந்த தேர்தலின் போது அந்த நடுநிலைப்பள்ளியில் வாக்குச்சாவடி அமைக்கப்பட்டது. ஆனால் மின்சாரம் இல்லை. இதனையடுத்து ஜெனரேட்டர் வசதியுடன் வாக்குப்பதிவு நடைபெற்றது. மின்சார வசதி இல்லாமல் தேர்தல் நடத்துவது சிரமத்தை கொடுத்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் அந்த அரசு பள்ளிக்கு தற்போது மின்சார வசதி கொடுக்கப்பட்டுள்ளது. வரும் நாடாளுமன்ற தேர்தலை கருத்தில் கொண்டு தான் மின்சார வசதி கொடுக்கப்பட்டுள்ளதாகவும், தேர்தலுக்கு நன்றி கூறுவதாகவும் அப்பகுதி மக்களும் அப்பள்ளி ஆசிரியர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

இது குறித்து தி நியூஸ் மினிட்டுக்கு கருத்து தெரிவித்த அப்பள்ளியின் தலைமை ஆசிரியர், இந்த பள்ளி 2002 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. ஆனால் மின்சார வசதி இல்லை. சோலார் பயன்படுத்தி பார்த்தோம். ஆனால் அதிக அளவில் மின் சாதன பொருட்களை பயன்படுத்த முடியவில்லை. மழைக்காலங்களில் வெளிச்சமில்லாமல் தவித்து வந்தோம். தற்போது மின்சார வசதி கிடைத்தது மகிழ்ச்சி. இன்னும் பல மாணவர்கள் பள்ளியில் சேர்வார்கள் என எதிர்ப்பார்க்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.


Advertisement

Advertisement

Advertisement
[X] Close