[X] Close

“2 தொகுதிகள் கட்டாயம் வேண்டும்”- சிபிஎம்

CPM-asks-two-seats-in-DMK-Alliance

மக்களவை தேர்தலில் திமுக கூட்டணியில் 2 தொகுதிகளை கட்டாயமாக வழங்க வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி என கோரிக்கை வைத்துள்ளது.

தமிழகத்தில் மக்களவை தேர்தல் கூட்டணி குறித்த பேச்சுவார்த்தையில் அரசியல் கட்சிகள் மும்முரமாக இறங்கியுள்ளன. திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு தமிழகத்தில் 9 இடங்கள், புதுச்சேரியில் 1 இடம் என மொத்தமாக 10 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. அத்துடன் இன்று காலை திமுக- மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி இடையேயான தொகுதிப் பங்கீடு குறித்த பேச்சுவார்த்தை நடைபெற்றது.

அப்போது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு கட்டாயமாக 2 தொகுதிகளை வழங்க வேண்டும் என அக்கட்சி சார்பில் திமுகவிடம் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. கோவை, மதுரை ஆகிய இரண்டு மக்களவை தொகுதிக்கு அதிக முக்கியத்துவம் தர வேண்டும் எனவும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. இதனிடைடைய முதற்கட்ட பேச்சுவார்த்தை மட்டுமே நிறைவடைந்துள்ளதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே அடுத்தக்கட்ட பேச்சுவார்த்தை விரைவில் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Advertisement

Advertisement

Advertisement
[X] Close