காஷ்மீர் தாக்குதலில் வீரமரணம் அடைந்தவர்களின் குடும்பத்தினரின் வாழ்க்கை செலவுகளை ஏற்க ரிலையன்ஸ் ஃபவுண்டேஷன் நிறுவனம் முன்வந்துள்ளது.
ஜம்மு-காஷ்மீர் மாநிலம் புல்வாமா மாவட்டத்தில் மத்திய ரிசர்வ் பாதுகாப்புப் படையினர் சென்ற வாகனங்கள் மீது பயங்கரவாதிகள் தற்கொலைப் படை தாக்குதல் நடத்தினர். இந்த கொடூரத் தாக்குதலில் 44 வீரர்கள் உயிர்த் தியாகம் செய்தனர். தாக்குதலில் உயிர் தியாகம் செய்த வீரர்களுக்கு நாடு முழுவதும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
இந்நிலையில் வீரமரணம் அடைந்தவர்களின் குடும்பத்தினரின் வாழ்க்கை செலவுகளை ஏற்க ரிலையன்ஸ் ஃபவுண்டேஷன் நிறுவனம் முன்வந்துள்ளது. இதுகுறித்து அந்நிறுவனம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் தேசத்திற்காக உயிர் நீத்தவர்களின் தியாகத்தைப் போற்றும் விதமாக வீரர்களின் குடும்பத்தாரின் வாழ்வாதாரத்தை உறுதிப்படுத்த விரும்புவதாக ரிலையன்ஸ் ஃபவுண்டேஷன் தெரிவித்துள்ளது.
அதன்படி, வீரர்களின் குடும்பத்தினரின் கல்வி உள்ளிட்ட பல்வேறு செலவுகளையும் ஏற்கத் தயார் எனவும் காயமடைந்த வீரர்களுக்கு இலவசமாக சிகிச்சை தர ரிலையன்ஸ் குழும மருத்துவமனைகள் தயாராக இருப்பதாகவும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
Loading More post
”எடப்பாடி பழனிசாமியை முதல்வராக்கியதே பா.ஜ.க.தான்” - நயினார் நாகேந்திரன்
என்ன 'குதிரை பேரமா..?'.. தவறுதலாக கூறிய நிர்மலா சீதாராமன்.. கலாய்க்கும் நெட்டிசன்கள்!
7 உயிர்களை பலிவாங்கி, தமிழகத்தை உலுக்கிய மேலவளவு சம்பவமும் சாதிய வன்மத்தின் பின்னணியும்!
தொழில் சீர்திருத்தங்களில் தமிழ்நாடு முதன்மை மாநிலம் - மத்திய அரசு அறிக்கை!
வெற்றிகரமாக சுற்றுவட்ட பாதையில் நிலைநிறுத்தப்பட்டது பிஎஸ்எல்வி சி-53! விரிவான தகவல்
7 உயிர்களை பலிவாங்கி, தமிழகத்தை உலுக்கிய மேலவளவு சம்பவமும் சாதிய வன்மத்தின் பின்னணியும்!
உஷார் மக்களே: ஜூலை 1-ம் தேதி முதல் அமலுக்கு வரும் நிதிசார் மாற்றங்கள்
ஜூன் 30 : இந்த வாரம் வெளியாகும் திரைப்படங்களும் வெப் சீரிஸ்களும்! #OTTGuide
செல்லப்பிராணிகளை வளர்ப்பவரா நீங்கள்? - உங்களுக்கு இந்த வியாதிகள் பரவும் வாய்ப்புகள் அதிகம்