Published : 09,Feb 2019 11:13 AM
வட இந்தியாவில் கள்ளச்சாராயம் குடித்து 36 பேர் பலி

உத்தரப் பிரதேசம், மற்றும் உத்தரகாண்டில் கள்ளச்சாராயம் குடித்த 36 பேர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உத்தரகாண்டின் ஹரித்துவாரில் உள்ள பால்பூர் கிராமத்தில் நடைபெற்ற துக்க நிகழ்ச்சியில் கலந்துகொள்வதற்காக உத்தரப் பிரதேசத்தின் சலீம்பூர், ககன்லேடி உள்ளிட்ட கிராமங்களை சேர்ந்தவர்கள் சென்றுள்ளனர். அப்போது துக்க நிழ்வில் அவர்கள் கள்ளச்சாராயம் குடித்துள்ளனர். சிலர் அதனை வாங்கி வந்து கிராம மக்கள் சிலருக்கும் வழங்கியுள்ளனர். இதனைக் குடித்த பலரும் வாந்தி எடுத்து மயங்கி விழுந்துள்ளனர்.
இதனையடுத்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர்கள் அடுத்தடுத்து உயிரிழந்தனர். கள்ளச் சாராயம் குடித்ததில் தற்போது வரை 36 பேர் உயிரிழந்துள்ளனர். இவர்களில் உத்தரகாண்ட் மாநில பால்பூர் கிராமத்தை சேர்ந்த 16 பேர் அடங்குவார்கள். மீதமுள்ளவர்களுக்கு சஹரான்பூரில் உள்ள மாவட்ட மருத்துவமனையில் சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது. 33 பேருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும், அவர்களின் நிலைமை தற்போது அபாய கட்டத்தை தாண்டி விட்டதாகவும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். உயிரிழந்தவர்களின் உடலுக்கு பிரேத பரிசோதனை செய்யப்பட உள்ளது.