Published : 17,Apr 2017 06:00 PM

இரு அணிகளும் ஒன்றுபட்டு இரட்டை இலை சின்னத்தை மீட்போம்: ஜெயக்குமார்

both-teams-unite-to-restore-the-ADMK-symbol--Jayakumar

அதிமுகவின் இரு அணிகளும் ஒன்றுபட்டு இரட்டை இலை சின்னத்தை மீட்போம், கட்சியிலிருந்து பிரிந்தாலும் அனைவரும் ஒரே குடும்பம்தான் என நிதி அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார்.

சென்னையில் அமைச்சர்கள் தங்கமணி மற்றும் உடுமலை ராதகிருஷ்ணன் இல்லத்தில் அமைச்சர்கள் திடீர் ஆலோசனை நடத்தினர். இந்த ஆலோசனைக்கூட்டத்தில் 25க்கும் மேற்பட்ட அமைச்சர்கள் பங்கேற்றனர்.

ஆலோசனைக் கூட்டத்திற்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்த நிதியமைச்சர் ஜெயக்குமார், கட்சியை ஒற்றுமையாக வழிநடத்துவது குறித்தும், தேர்தல் ஆணையத்தில் பிரமாணப்பத்திரம் தாக்கல் செய்வது குறித்தும் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது எனக் கூறினார். அனைத்து அமைச்சர்கள், எம்.எல்.ஏக்கள் ஒற்றுமையாக உள்ளனர் எனக் கூறிய ஜெயக்குமார், ஓபிஎஸ் கருத்தையொட்டி இரு அணிகளும் இணைந்து ஒற்றுமையாக செயல்படுவது குறித்தும் ஆலோசித்தோம் என தெரிவித்தார்.

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்