Published : 13,Apr 2017 09:18 AM
குட்டிக்கரணம் அடித்து விவசாயிகள் போராட்டம்

டெல்லியில், தமிழக விவசாயிகள் இன்று குட்டிக்கரணம் அடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளிலும் பயிர் கடனை தள்ளுபடி செய்ய வேண்டும், கூடுதலாக வறட்சி நிவாரணம், காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, டெல்லியில் தமிழக விவசாயிகள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டிருக்கின்றனர். அவர்களின் போராட்டம் இன்று 31 நாளாக நடைபெற்று வருகிறது. தினமும் பல்வேறு வடிவங்களில் போராட்டங்களை மேற்கொண்டு வரும் விவசாயிகள், மத்திய அரசின் கவனத்தை ஈர்க்கும் முயற்சியாக இன்று குட்டிக்கரணம் அடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.