Published : 26,Dec 2018 03:36 AM

திமுக ஊராட்சி சபைக் கூட்டம்: ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார்..!

MK-Stalin-inaugurate-dmk-panchayat-council-meeting

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், ஊராட்சி சபைக் கூட்டத்தை திருவாரூர் மாவட்டத்தில் தொடங்கி வைக்க உள்ளார்.

“மக்களிடம் செல்வோம், மக்களிடம் சொல்வோம், மக்களின் மனங்களை வெல்வோம்”என்ற முழக்கங்களை முன்வைத்து , திமுக சார்பில் ஜனவரி 3-ஆம் தேதி முதல் பிப்ரவரி 10-ஆம் தேதி வரை ஊராட்சி சபைக் கூட்டம் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, இந்த ஊராட்சி சபைக் கூட்டங்களை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் திருவாரூர் மாவட்டத்திலும், பொருளாளர் துரைமுருகன் ஈரோடு மாவட்டத்திலும் ,முதன்மைச் செயலாளர் டி.ஆர்.பாலு காஞ்சிபுரம் மாவட்டத்திலும் தொடங்கி வைக்க உள்ளதாக திமுக தலைமைக் கழகம் அறிவித்துள்ளது. இக்கூட்டத்தின்போது மத்திய, மாநில அரசுகளின் நிர்வாக தோல்விகள் மக்களிடம் எடுத்துக்கூறப்படும் என திமுக தெரிவித்துள்ளது.

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்