இந்தோனேசியாவில் ஏற்பட்ட சுனாமியில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 222 ஆக உயர்ந்துள்ளது. 800க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளனர்.
இந்தோனேசியாவின் ஜாவா மற்றும் சுமத்ரா தீவுகளை இணைக்கும் பகுதிகளாக உள்ள சுந்தா ஜலசந்தியை ஒட்டிய கடற்கரை பகுதிகளில் நள்ளிரவில் திடீரென்று சுனாமி தாக்கியது. இங்கு கொந்தளித்துக் கொண்டிருந்த கிரகட்டாவ் எரிமலை வெடிக்கத் துவங்கியுள்ளதை அடுத்து, கடலுக்கு அடியில் ஏற்பட்ட நிலநடுக்கம் காரணமாக இந்த சுனாமி ஏற்பட்டதாகத் தெரிகிறது.
சுனாமி தாக்கியதில் நூற்றுக்கணக்கான வீடுகள், கடைகள், வர்த்தக கட்டிடங்கள், ஓட்டல்கள் இடிந்துள்ளன. இந்த சுனாமியால், ஜாவா தீவில் உள்ள பெண்டக்லங்க், செரங், தெற்கு லம்புங் ஆகிய பகுதிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. வீடுகளை இழந்தவர்கள் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
அங்கு மீட்பு பணிகள் தொடர்ந்து நடந்து வருகின்றன. இந்நிலையில் இந்த சுனாமியில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 222 ஆக அதிகரித்துள்ளது. மேலும் சுமார் 800க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளதாக பேரிடம் முகமை தகவல் தெரிவித்துள்ளது. பல பேர் மாயமாகி உள்ளதால் பலியானோர் எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Loading More post
“எங்களுக்கு அழுத்தம் கொடுத்தாங்க”- ஓபிஎஸ் இடம் மன்னிப்பு கேட்ட திருநங்கை நிர்வாகி!
“24 மணி நேரத்தில் அதிருப்தி அமைச்சர்கள் தங்களது பதவிகளை இழப்பார்கள்” - சஞ்சய் ராவத்
”பக்கோடா விற்பதும், பஜ்ஜி போடுவதும் வேலைவாய்ப்பு அல்ல” - ப.சிதம்பரம்
”திரௌபதி குடியரசுத் தலைவர் என்றால் பாண்டவர்கள் யார்?”.. சர்ச்சையில் ராம் கோபால் வர்மா!
ரஞ்சிக் கோப்பை: மாஸ் காட்டிய ம.பி. பேட்ஸ்மேன்கள்! தோல்வியை தவிர்க்க போராடும் மும்பை!
‘பஞ்சாங்கம் மூலம் துல்லியமா சேட்லைட் விட்டாங்க’ - சோஷியல் மீடியாவை அலறவிட்ட மாதவன்!
10 மாதங்கள் ஆற்றில் கிடந்த பின்னும் வேலை செய்த ஐபோன்.. இங்கிலாந்தில் நிகழ்ந்த சுவாரஸ்யம்
டிஸ்மிஸ் ஆகப்போகிறார்களா அதிருப்தி எம்.எல்.ஏ.கள்? மகா. அரசியல்! டாப் 5 லேட்டஸ்ட் தகவல்கள்!
எளியோரின் வலிமைக் கதைகள் 33: 'எச்சில் இலை எடுக்குறேனு என்னைக்கும் வருத்தப்பட்டதில்ல'