Published : 10,Apr 2017 07:47 AM
விவசாயிகளை, அரசு கண்டுகொள்ளவில்லை: திருச்சி சிவா

தமிழக விவசாயிகள் பற்றி ஒட்டுமொத்த நாடும் கவலைப்படும்போது தமிழக அரசு கண்டுகொள்ளவில்லை என்று திமுக எம்.பி. திருச்சி சிவா கூறியுள்ளார்.
டெல்லியில் கடந்த 28 நாட்களாக போராட்டம் நடத்தி வரும் விவசாயிகள் இன்று நிர்வாணப் போராட்டத்தில் ஈடுபட்டதால் கைது செய்யப்பட்டனர். இதுபற்றி கருத்து தெரிவித்துள்ள திமுக எம்.பி திருச்சி சிவா, ’தமிழக முதலமைச்சர் இதுவரை விவசாயிகளை சந்தித்துப் பேசவில்லை’ என்று குற்றஞ்சாட்டியுள்ளார்.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலத் தலைவர் முத்தரசன் கூறும்போது, மத்திய, மாநில அரசுகள் அலட்சியத்தால் விவசாயிகள் போராட்டம் மேலும் வலுப்பெறும்; பிரதமர் விவசாயிகளை சந்தித்து பேசி இருக்கலாம்’ என்று கூறியுள்ளார்.