[X] Close

திண்டுக்கல் அருகே மையம் கொண்ட கஜா புயல்.. கனமழைக்கு வாய்ப்பு

Chance-for-Heavy-Rain-at-Dindigul

கஜா புயல் கரையை கடந்து திண்டுக்கல் அருகே மையம் கொண்டுள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.


Advertisement

தமிழக கடலோரப்பகுதிகளை புரட்டிப்போட்ட கஜா புயல் சுமார் 9 மணி நேரத்திற்குப் பிறகு கரையை கடந்தது. அதிராம்பட்டினத்தில் 100 கி.மீ முதல் 110 கிலோமீட்டர் வேகத்தில் புயல் கரையைக் கடந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது. தீவிர புயலாக இருந்த கஜா வலுக்குறைந்து புயலாக மாறியுள்ளது நிலையில், கஜா திண்டுக்கல் அருகே மையம் கொண்டுள்ளது. தற்போது மணிக்கு 23 கி.மீ வேகத்தில் கஜா புயல் நகர்ந்து செல்கிறது. இதனால் திண்டுக்கல், கரூர், திருப்பூர், திருச்சி உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை பெய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்னும் 3 மணி நேரத்தில் கஜா புயல் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலு குறையும் என கூறப்படுகிறது.


Advertisement

கஜா புயலின் எதிரொலியாக உள் மாவட்டங்களிலும் கனமழை பெய்து வருகிறது. மதுரை, சிவகங்கை, சேலம், விழுப்புரம் உள்ளிட்ட மாவட்டங்களின் பல இடங்களில் பரவலாக மழை பெய்து வருவது குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement
[X] Close