Published : 09,Oct 2018 01:25 PM

''கு‌ஜராத்தில் அமைதியை கொண்டு வாருங்கள்'' - ராகுல்காந்தி வலியுறுத்தல்

Congress-Leader-Rahul-Gandhi-request-for-Gujarat-Peaceful

குஜராத்தில் அமைதி திரும்ப மாநில அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என காங்கிரஸ் கட்சித் தலைவர்‌ ராகுல் காந்தி வலியுறுத்தியுள்ளார்.

குஜராத் அரசின் தவறான பொருளா‌தார கொள்கைகள், அதனால் ஏற்பட்ட வேலை இழப்புகள் ஆகியவையே அங்குள்ள வெளிமாநில தொழிலாளர்‌கள் மீதான தாக்குதலுக்கு வழிவகுத்ததாக ராகுல்காந்தி கூறியுள்ளார். எனவே குஜராத்தில் அமைதி திரும்ப நடவடிக்கை எடுப்பதுடன், அங்குள்ள ஒவ்வொரு வெளிமாநிலத்தவரும் பாதுகாப்பாக வாழ வழி செய்ய வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார். குஜராத்தின் சபர்கந்தாவில் 14 மாத பெண் குழந்தையை பீகார் தொழிலாளி ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்த ‌விவகாரத்தில், அம்மாநிலத்தில் உள்ள வெளிமாநிலத்தவர் மீது கடும் தாக்குதல்கள் நடந்தன. இது தேசிய அளவில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்