Published : 21,Sep 2018 07:57 AM

“காற்றாலை ஊழலின் ஆதாரத்தை வெளியிடுவேன்” - ஸ்டாலின் சவால்

MK-Stalin-Statement-about-Minister-Thangamani

காற்றாலை மின்சாரம் வாங்கியதில் ஊழல் தொடர்பாக அமைச்சர் தங்கமணி பதவிவிலக தயாரா என கேள்வி எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் எழுப்பியுள்ளார்.

இதுதொடர்பாக ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், காற்றாலை மின்சாரம் வாங்கியதில் ஊழல் நடக்கவில்லை என அமைச்சர் தங்கமணி ஜமுக்காளத்தில் வடிகட்டிய பொய்யை கூறியிருப்பதாக என குறிப்பிட்டுள்ளார். ஆதாரங்களைத் திரட்டி வைத்துக்கொண்டுதான் அறிக்கை வெளியிடுவேன் என்பது தெரியாமல் அமைச்சர் ஊழலை மறைக்கப் பார்ப்பதாக அவர் குற்றம்சாட்டியுள்ளார். உற்பத்தியே ஆகாத காற்றாலையின் பெயரில் 9 கோடியே 17 லட்சத்து 73 ஆயிரத்து 379 ரூபாய் மதிப்புள்ள காற்றாலை மின்சாரம் பெறப்பட்டதாக போலி கணக்கு காட்டப்பட்டது என ஸ்டாலின் சுட்டிக்காட்டியுள்ளார். 

மின் வாரியத்திற்கு ஏதும் பிரச்னை இல்லை என்றால் கணக்கு அதிகாரி 9 கோடியை வசூல் செய்யக் கூறியிருப்பது ஏன் ? என கேள்வி எழுப்பியுள்ளார். காற்றாலை மின்சாரத்தில் போலி ஒதுக்கீடு கணக்கு காட்டி ஊழல் நடந்திருப்பது ஆதாரப்பூர்வமானது என குறிப்பிட்டுள்ள ஸ்டாலின், ஊழல் நடைபெறவில்லை என்றால் அமைச்சர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடத் தயாரா ? என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்