Published : 27,Aug 2018 11:09 AM
வாட்ஸ் அப் குறைத்தீர்ப்பு அதிகாரியை நியமிக்காதது ஏன்?: உச்சநீதிமன்றம் கேள்வி

வாட்ஸ் அப் நிறுவனம் இந்தியாவுக்கான குறைத்தீர் அதிகாரியை ஏன் நியமிக்கவில்லை என உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.
வாட்ஸ் அப் நிறுவனம் பணப் பரிவர்த்தனை வசதியை ஏற்படுத்தியுள்ளது. ஆனால், அதில் ஏதேனும் புகார்கள், பிரச்னை என்றால் தொடர்பு கொள்ள இதுவரை வாட்ஸ் அப் நிறுவனம் குறைத்தீர் அதிகாரியை நியமிக்கவில்லை என உச்சநீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடரப்பட்டது. அதனை விசாரித்த நீதிமன்றம் ஏன் இதுவரை குறைத்தீர் அதிகாரியை நியமிக்கவில்லை என பதிலளிக்க வாட்ஸ் அப் நிறுவனத்திற்கு உத்தரவிட்டுள்ளது.
மேலும், மத்திய நிதியமைச்சகம், தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் ஆகியவையும் 4 வாரங்களுக்கு இது தொடர்பாக பதிலளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.