வெள்ளப் பாதிப்ப்பில் இருந்து கேரள மாநிலம் விரைவில் மீண்டு வர, ராகவேந்திரரிடம் வேண்டுவதாக கூறியுள்ள நடிகர் ராகவா லாரன்ஸ், ரூ.1 கோடி நிவாரண நிதி வழங்குகிறார்.
கேரளாவில் வரலாறு காணாத மழை, வெள்ளம் காரணமாக கடும் சேதம் ஏற்பட்டுள்ளது. இழப்பை சரிசெய்ய ரூ.2,500 கோடி ஆகும் என அரசு மதிப்பிட்டுள்ளது. பாதிக்கப்பட்ட மக்களுக்கு பல்வேறு தரப்பினரும் உதவிக்கரம் நீட்டி வருகின்றனர். தமிழ் சினிமாவில் நடிகர் ரஜினிகாந்த், கமல்ஹாசன், சூர்யா, கார்த்தி, விஷால், விக்ரம் உட்பட பல நடிகர், நடிகைகள் நிதியுதவி அளித்துள்ளனர். அந்த வகையில் நடிகர் ராகவா லாரன்ஸ் ரூ.1 கோடி வழங்க உள்ளதாகத் தெரிவித்துள்ளார். வரும் சனிக்கிழமை கேரள முதலமைச்சர் பினராயி விஜயனை நேரில் சந்தித்துக்கு இந்த தொகையை வழங்க இருக்கிறார்.
Read Also -> கமலின் 'ஹேராம்' தந்த திருப்புமுனை: ராணி முகர்ஜி ஜிலீர்!
Read Also -> கேரள சேதம்: மகனின் திருமணத் திட்டத்தை மாற்றிய பாடகர் உண்ணி மேனன்
இதுபற்றி ட்விட்டரில், ‘வெள்ளப்பாதிப்பு காரணமாக கேரளா சிதைந்திருப்பது கண்டு மனமுடைந்தேன். என் சகோதர, சகோதரிகள் வெள்ளத் தால் பாதிக்கப்படுவது வருத்தத்தை அளிக்கிறது. நான் நேரடியாக பாதிக்கப்பட்ட இடங்களுக்குச் சென்று உதவ நினைத்தேன். அப்போது மழை அதிகமாக இருந்ததால் போக வேண்டாம் என்று சொன்னார்கள். இப்போது மழை நின்றுவிட்டது. இதுதான் சரியான நேரம். சனிக்கிழமை கேரள முதல்வர் பினராயி விஜயனை சந்திக்கிறேன். அவரிடம் நிவாரண நிதியாக ரூ.1 கோடியை வழங்குகிறேன். அரசுடன் இணைந்து பாதிக்கப்பட்ட பகுதிகளில் சென்று உதவி செய்ய இருக்கிறேன். பாதிப்பில் இருந்து கேரளா விரைவில் மீண்டெழுவதற்கு ராகவேந்திரர் சாமியிடம் வேண்டுகிறேன்’ என்று கூறியுள்ளார்..
Loading More post
நின்று கொண்டிருந்த லாரி மீது கார் மோதி 8 பேர் பலி; திருமணம் முடிந்து திரும்பும்போது சோகம்
மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி சிலை திறப்பு விழா: தமிழகம் வருகிறார் வெங்கையா நாயுடு
‘கொல்கத்தா புறப்படுகிறேன்’- கொண்டாட்டத்தில் விராட் கோலி
தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு 4-ம் ஆண்டு நினைவுநாள்; பாதுகாப்புக்காக போலீசார் குவிப்பு
பாகிஸ்தான் பெண் உளவாளியிடம் ராணுவ ரகசியங்களை வழங்கிய ராணுவ வீரர் கைது
எளியோரின் வலிமைக் கதைகள் 31: ஊரையே சுத்தம் செய்தாலும் வாசமில்லா வாழ்க்கை
தோனி மட்டும் இன்னும் கொஞ்சம் வேகமாக ஆடியிருந்தால்.. சிஎஸ்கே வெற்றியை தட்டிப்பறிந்த அஸ்வின்
அரசு காப்பீட்டு திட்டத்தில் 4 ஆண்டுகளில் ரூ.2,368 கோடி பயன்படுத்தவில்லை! அதிர்ச்சி தகவல்
கல்குவாரி விபத்தால் உருக்குலைந்த குடும்பம்.. கைக்குழந்தையுடன் தவிக்கும் இளம்பெண்!