Published : 22,Aug 2018 10:02 AM

தவறாக ‌வழிநடத்த முயல்வதாக மாணவி புகார் - கல்லூரியில் நீதிபதி விசாரணை

tiruvannamalai-college-female-student-sexual-allegation-on-professor

திருவண்ணாமலையில் கல்லூரி மாணவி அளித்த பாலியல்தொல்லை புகாரை அடுத்து, மாவட்ட நீதிபதி மகிழேந்தி விசாரணை நடத்தினார். 

மாணவியிடம் வாக்குமூலம் பெற்ற பின், அவருக்கு மேலும் பிரச்னைகள் ஏற்படாத வகையில் வேறு கல்லூரிக்கு மாற்ற நீதிபதி மகிழேந்தி உத்தரவிட்டார். சம்பந்தப்பட்ட கல்லூரியிலும், குற்றஞ்சாட்டப்பட்ட பேராசிரியைகளிடமும் நீதிபதி விசாரணை மேற்கொண்டார். பேராசிரியைகளே கல்லூரி மாணவியை தவறாக வழிநடத்த முயன்றது வேதனையளிப்பதாகவும், சம்பந்தப்பட்ட இருவர் மீதும் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் நீதிபதி மகிழேந்தி தெரிவித்துள்ளார். 

திருவண்ணாமலையில் கல்லூரி மாணவி ஒருவர் தன்னை பாலியல் தொந்தரவுக்கு ஆளாக்குவதாக விடுதி காப்பாளர்கள், பேராசிரியர்கள் இருவர் மீது குற்றஞ்சாட்டியிருந்தார். பேராசிரியைகள் மாணவியை மிரட்டும் ஆடியோ ஆதாரங்களையும் இணைத்து அவர் புகார் அளித்திருந்தார். இதனையடுத்து, மாவட்ட நீதிபதி விசாரணை மேற்கொண்டார்.

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்