[X] Close

மொழிப்போர் தியாகி பேத்தியின் படிப்பு செலவை ஏற்ற திமுக

MK-Stalin-Give-a-Check-to-student-for-her-Study-Fee

மொழிப்போர் தியாகி அரங்கநாதன் பேத்தியின் கோரிக்கையை ஏற்று மொத்த படிப்பு செலவுக்காக காசோலையை திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.


Advertisement

இதுதொடர்பாக ஸ்டாலின் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில், மறைந்த மொழிப்போர் தியாகி அரங்கநாதன் அவர்களின் பேத்தி கோமதி 12ம் வகுப்பு பொதுத்தேர்வில் 1129 மதிப்பெண்கள் பெற்றிருந்தும், நீட் தேர்வில் தோல்வியடைந்தார். இந்தக் காரணத்தால் தன்னுடைய மருத்துவக் கனவு பறிபோன நிலையில், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின் அவர்களிடத்தில் மருத்துவ தேர்வுக்கு தயாராவதற்கு உதவிடுமாறு கோரிக்கை வைத்தார். அந்தக் கோரிக்கையினை ஏற்று, கோமதியின் உயர்கல்விக்கான மொத்த செலவுக்கான காசோலையை ஸ்டாலின் வழங்கினார்.


Advertisement

Advertisement
[X] Close