குடும்பத்துடன் லண்டன் சென்றுவிட்டு வீடு திரும்பிய டாக்டரின் வீட்டில் 1 கோடி மதிப்பிலான நகைகள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது.
சென்னை நுங்கம்பாக்கத்தைச் சேர்ந்த மருத்துவர் கவுசிக். இவர் கடந்த 18-ம் தேதி குடும்பத்துடன் லண்டன் சென்று விட்டார். இன்று காலை சென்னை திரும்பிய இவர், தனது வீட்டு பூஜை அறையில் உள்ள லாக்கரை திறந்து பார்த்துள்ளார். அப்போது லாக்கரில் இருந்த சுமார் ஒரு கோடி ரூபாய் மதிப்புள்ள தங்க, வைர நகைகள், விலை உயர்ந்த கைக்கடிகாரங்கள் மற்றும் 2 லட்சம் ரூபாய் பணம் ஆகியவை மாயமாகி இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
என்ன நடந்து என்பதை அறிய அவர் சிசிடிவி கேமராவின் காட்சியை சோதித்து பார்த்துள்ளார். ஆனால் வீட்டில் இருந்த சிசிடிவி கேமராவின் இயக்கம் 20ம் தேதி காலை 11 மணியுடன் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது தெரியவந்துள்ளது. இதுதொடர்பாக நுங்கம்பாக்கம் காவல்நிலையத்தில் மருத்துவர் கவுசிக் புகார் அளித்துள்ளார். நிகழ்விடத்துக்கு வந்த நுங்கம்பாக்கம் உதவி ஆணையர் முத்துவேல் பாண்டி உள்ளிட்ட காவல்துறையினர் கவுசிக் வீட்டுப் பணியாளர்கள் 5 பேரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். கவுசிக் ஊருக்குச் சென்ற நேரத்தில் அவரது வீட்டில் பணியாளர்கள் தங்கியிருந்தது குறிப்பிடத்தக்கது.
Loading More post
காஷ்மீர் பிரிவினைவாத தலைவர் யாசின் மாலிக்கிற்கு ஆயுள் தண்டனை
மயிலாடுதுறை: சாலையில் சென்றுகொண்டிருந்த புல்லட் திடீரென தீப்பிடிப்பு
காங்கிரஸில் இருந்து விலகல்; சமாஜ்வாதி ஆதரவுடன் எம்.பி.யாகிறார் கபில் சிபல்
ஸ்பைஸ்ஜெட் நிறுவனத்தை 'ஹேக்' செய்ய முயற்சி - விமானங்கள் புறப்படுவதில் தாமதம்
``எந்த வகுப்புக்கு எப்போது பள்ளி திறப்பு?”- அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பதில்
ரஷீத் கானின் அந்த 4 ஓவர்களும்; ராஜஸ்தான் ராயல்ஸ் கோட்டைவிட்ட இடங்களும்!
ஐபிஎல் பிளே ஆஃப் போட்டி: மழை பெய்தால் யாருக்கு சாதகம்? - விதிகள் என்ன?
வலி நிறைந்த வாழ்வின் தடங்கள்... எப்போது ஆறும் கேரள விஸ்மயா கடந்து சென்ற முட்பாதையின் ரணம்?
தினேஷ் கார்த்திக் இம்முறையும் பெஞ்ச் தானா? அணி தேர்வில் இப்படியொரு இடியாப்ப சிக்கலா!