[X] Close

நாய்களுக்கு மருத்துவமனையில் கிடைக்கும் சொகுசு ! திண்டாடும் நோயாளிகள்

Patients-On-The-Bed--Dogs-Under-It-in-Uttar-pradesh

உத்தரப்பிரதேசத்தில் உள்ள அரசு சுகாதார மருத்துவமனையில் நோயாளிகளின் படுக்கைக்கு கீழே தெரு நாய்கள் படுத்திருக்கும் காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


Advertisement

உத்தரப்பிரதேச மாநிலம் ஹார்டோய் மாவட்டத்தில் அரசு சுகாதார மருத்துவமனை செயல்பட்டு வருகிறது. இங்கு நோயாளிகளுக்காக அமைக்கப்பட்டிருக்கும் படுக்கைகள் வரிசையாக இடம்பெற்றிருக்க அதற்கு கீழே தெரு நாய்கள் சொகுசாக படுத்துக் கிடக்கின்றன. இதனால் நோயாளிகள் மிகுந்த அவதியுற்று வருகின்றனர். இதுகுறித்து நோயாளிகள் கூறும்போது, “ நாய்கள் அடிக்கடி வருவதால் எங்களுக்கு மிகுந்த பயமாக உள்ளது. இதுகுறித்து புகார் அளித்தால், ‘நாய் வந்தால் விரட்ட வேண்டியதுதானே’ என ஊழியர்கள் கேட்கின்றனர். ஒவ்வொரு முறையும் நாயை விரட்டிக் கொண்டிருக்க எங்களால் முடியவில்லை” என தெரிவித்தனர்.


Advertisement

இதுகுறித்து மருத்துவமனையின் தலைமை மருத்துவ அதிகாரி கூறும்போது, “  இந்த பிரச்னையை நாங்கள் கவனத்தில் எடுத்துக்கொண்டுள்ளோம். இந்த சம்பவம் மேலும் நடைபெறாமல் இருக்க ஊழியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது” என தெரிவித்தார்.

உத்தரப்பிரதேசத்தில் கடந்த சில மாதங்களில் மட்டும் தெரு நாய்கள் கடித்து 10-க்கும் மேற்பட்டோர் பரிதாபமாக உயிரிழந்த நிலையில் இந்தச் சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.


Advertisement

Advertisement
[X] Close