[X] Close

ஸ்டெர்லைட் போராட்டத்தில் துப்பாக்கிச் சூடு: 9 பேர் உயிரிழப்பு

Gun-shot-at-Tuticorin-sterlite-protest--9-Dead

ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தில் போராட்டக்காரர்கள் மீது போலீசார் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் 9 பேர் உயிரிழந்தனர்.


Advertisement

தூத்துக்குடி மாவட்டத்தில் செயல்பட்டு வரும் ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி அப்பகுதி மக்கள் தொடர்ச்சியாக போராட்டம் நடத்தி வந்தனர். போராட்டம் இன்று 100-ஆவது நாளை எட்டிய நிலையில், ஆயிரக்கணக்கான போராட்டக்காரர்கள்  தடையை மீறி தூத்துக்குடி ஆட்சியர் அலுவலகத்திற்குள் நுழைந்தனர். போராட்டக்காரர்களை போலீசார் தடுக்க முயன்றபோது போராட்டக்காரர்களுக்கும்- போலீசாருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டதால் பதட்டம் ஏற்பட்டது. தொடர்ந்து போராட்டக்காரர்களை கட்டுப்படுத்தும் முயற்சியாக போலீசார் துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதில் போராட்டக்காரர்களில் பெண்கள் உள்பட 9 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். ஜெயராமன், கிளாட்ஸன், கந்தையா, வினிஸ்டா, தமிழரசன், சண்முகம், மற்றும் மணிராஜ் உள்பட 9 பேர் உயிரிழந்துள்ளனர்.


Advertisement

இதனிடையே, ஸ்டெர்லைட் விவகாரத்தில் தூத்துக்குடி மக்கள் அமைதி காக்க வேண்டுமென்று முதலமைச்சர் பழனிசாமி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

வீடியோ


Advertisement

Advertisement
[X] Close