[X] Close

பந்துவீச்சாளர்களை மீண்டும் விளாசிய தோனி!

We-don-t-want-to-qualify--we-just-want-to-win-it--Dhoni

எப்படி பந்துவீச வேண்டும் என்று அறிவுறுத்தியும் எங்கள் பந்துவீச்சாளர்கள் சிறப்பாக செயல்படவில்லை என்று சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் தோனி கூறினார்.

ஐபிஎல் தொடரில் நேற்று நடந்த 43-வது லீக் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் - ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதின. முதலில் ஆடிய சென்னை அணி, 4 விக்கெட் இழப்புக்கு 176 ரன்கள் எடுத்தது. சுரேஷ் ரெய்னா 52 ரன்கள் எடுத்தார். பின்னர் 177 ரன்கள் இலக்கை நோக்கி களமிறங்கிய ராஜஸ்தான் அணி, கடைசி ஓவரில் திரில்லிங் வெற்றி பெற்றது. அந்த அணியின் ஜாஸ் பட்லர், 2 சிக்சர், 11 பவுண்டரிகளுடன் 93 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். ஆட்டநாயகன் விருது அவருக்கு வழங்கப்பட்டது.

 தோல்விக்கு பின் சிஎஸ்கே கேப்டன் தோனி கூறும்போது, ’இந்தப் போட்டியில் தோற்றுவிட்டோம். 176 ரன்கள் என்பது ஓரளவு நல்ல ஸ்கோர்தான். ஆனால், எங்கள் பந்துவீச்சாளர்கள் ஒரு குறிப்பிட்ட லென்தில் வீசியிருக்க வேண்டும். அவர்களிடம் எப்படி பந்துவீச வேண்டும் என்று அறிவுறுத்தியும் அதை சரியாகச் செயல்படுத்தவில்லை. இதுதான் சிறந்த ஆடும் லெவன் அணி. இந்த அணியால் சிறப்பாக செயல்பட முடியும். நாங்கள் இனி தகுதி பெற ஆடவில்லை. வெற்றி பெற ஆடுகிறோம்’ என்றார்.


Advertisement

ராஜஸ்தான் அணி கேப்டன் ரஹானே கூறும்போது, ‘ஜாஸ் பட்லர் சிறப்பாக ஆடி அணியை வெற்றி பெற வைத்துள்ளார். இந்த பிட்ச் பேட்டிங்கிற்கு எளிதாக இல்லை. கடைசி கட்டத்தில் கிருஷ்ணப்பா கவுதம் அடித்த சிக்சர்கள் முக்கியமானவை. நான் பதற்றமாக இருந்தேன். ஆனாலும் கட்டுப்படுத்திக்கொண்டேன். அவர் ஸ்பின்னர்களை கையாண்ட விதமும் அருமையாக இருந்தது. மும்பை அணிக்கு எதிராக மும்பையிலும் கவுதம் சிறப்பாக செயல்பட்டார். இனி இழப்பதற்கு எதுவும் இல்லை. அடுத்த மூன்று போட்டிகளையும் வெல்ல வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம்’ என்றார்.  


Advertisement

Advertisement
[X] Close