Published : 08,Jan 2017 05:52 AM

தமிழக மீனவர்கள் 10 பேர் சிறைபிடிப்பு

Sri-Lankan-navy-arrested-10-TN-fishermen

எல்லை தாண்டி மீன் பிடித்த குற்றச்சாட்டில் தமிழக மீனவர்கள் 10 பேரை இலங்கை கடற்படையினர் சிறைபிடித்துள்ளனர்.

தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் தொடர்ந்து அத்துமீறி தாக்குதல் நடத்தி வருகின்றனர். இந்நிலையில், நெடுந்தீவு அருகே தமிழக மீனவர்கள் மீன்பிடித்துக்கொண்டிருந்த போது அங்கு வந்த இலங்கை கடற்பைடயினர், எல்லை தாண்டியதாக 6 பேரை கைது செய்துள்ளனர். அதேபோல், மன்னார்குடி அருகே எல்லை தாண்டியதா‌க 4 தமிழக மீனவர்களும் இலங்கை கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்டனர்.

இதுமட்டுமின்றி, மீனவர்களின் 2 படகுகளும் இலங்கை கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்டுள்ளன.

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்