[X] Close

ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் தொடர்பான புகார்களை நீங்களும் தெரிவிக்கலாம்

RK-Nagar-Byelection--Control-Room-opened-for-complaints

ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் தொடர்பான புகார்களை அளிக்க தனி கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளதுடன், கட்டணமில்லா தொலைபேசி எண்ணும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக சென்னை மாநகராட்சி ஆணையர் வெளியிட்டுள்ள அறிக்கையில், இடைத்தேர்தலில் போட்டியிடவுள்ள வேட்பாளர்கள் மற்றும் அரசியல் கட்சியினரின் தேர்தல் செலவுகளை கண்காணிக்க 3 பறக்கும் படைகளும், 3 நிலையான கண்காணிப்பு குழுக்களும், 2 வீடியோ கண்காணிப்பு குழுக்களும் அமைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

தேர்தல் நன்னடத்தை விதி மீறல்கள் மற்றும் தேர்தல் செலவினம் குறித்த புகார்கள் ஏதேனும் இருந்தால் மாநகராட்சி அலுவலக கட்டடத்தில் முதல் தளத்தில் அமைக்கப்பட்டுள்ள தேர்தல் கட்டுப்பாட்டு அறைக்கு புகார் தெரிவிக்கலாம் என கூறப்பட்டுள்ளது. இந்த தேர்தல் கட்டுப்பாட்டு அறையில் 1800 -4257012 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண் அமைக்கப்பட்டுள்ளதாகவும் சென்னை மாநகராட்சி ஆணையர் தெரிவித்துள்ளார்.


Advertisement

Advertisement

Advertisement
[X] Close