[X] Close

ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக திரண்ட 10 கிராம மக்கள்!

10-Village-people-protest-against-Sterlite-in-Tuticorin

ஸ்டெர்லைட் ஆலையை மூட வலியுறுத்தி 10க்கும் மேற்பட்ட கிராம மக்கள் தூத்துக்குடி மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அலுவலகத்தை முற்றுகையிட முயன்றனர். 


Advertisement

ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக துத்துக்குடி மாவட்டத்தில் குமரெட்டியாபுரம், பண்டாரம்பட்டி, பனிமயமாதா கோயில் உள்ளிட்ட 15க்கும் மேற்பட்ட இடங்களில் போராட்டங்கள் நடந்து வருகின்றன. அதன் ஒரு பகுதியாக அனைத்து கிராம கூட்டமைப்பு சார்பில் மடத்தூரிலிருந்து இரண்டாயிரத்துக்கும் மேற்பட்டோர் மாசுக்கட்டுப்பாட்டு அலுவலகத்தை நோக்கி வந்தனர். அவர்களை வழி மறித்த காவல் துறையினர், ஒவ்வொரு கிராமத்திற்கும் 2 பேரை மட்டும் பொறியாளர் கண்ணனிடம் மனு அளிக்க அனுமதித்தனர். 

அந்த மனுவில் ஸ்டெர்லைட் ஆலையை மூட வேண்டும், ஆலை விரிவாக்கப்பணிக்கு அனுமதி அளிக்கக்கூடாது உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைக்கப்பட்டன. மனு தொடர்பாக நடவடிக்கை எடுக்கப்படும் என கண்ணன் உறுதி அளித்ததை அடுத்து அனைவரும் கலைந்து சென்றனர். தங்கள் கோரிக்கை நிறைவேறவில்லை என்றால், மீண்டும் போராட்டம் வெடிக்கும் என மக்கள் கூறிவிட்டு சென்றனர்.


Advertisement

வீடியோ


Advertisement

Advertisement
[X] Close