[X] Close

பாஜகவுடன் அதிமுக கூட்டணி?

ADMK-alliance-with-BJP--

இந்திய அரசியலில் அதிமுகவும், பாரதிய ஜனதாவும் இரட்டைக் குழல் துப்பாக்கியாய் செயல்படுவதற்கான அறிகுறிகள் தெரிய தொடங்கிவிட்டதாக அதிமுகவின் அதிகாரப்பூர்வ செய்தித்தாளான நமது அம்மா நாளிதழில் கட்டுரை வெளியாகியுள்ளது. அதனை விரிவாக பார்க்கலாம்.


Advertisement

திமுக நடத்தும் போராட்டங்கள் காவிரிக்காக அல்ல, மத்திய மாநில அரசுகளின் ஒற்றுமையை சீர்குலைக்கவே என்ற தலைப்பில் அ. திருமலை என்பவரின் கட்டுரை வெளியாகியுள்ளது. இதில் திமுகவை பற்றி கடுமையாக விமர்சிக்கப்பட்டுள்ளது. காவிரி மேலாண்மை வாரியம் அமைத்தே தீரவேண்டும் என்ற உறுதியான நம்பிக்கையோடு, மத்தியில் ஆளும் பாரதிய ஜனதாவும், தமிழகத்தை ஆளும் அதிமுகவும், ஒருங்கிணைந்து பொறுப்புடன் செயல்பட்டு இறுதி முடிவினை எட்டிக்கொண்டிருக்கிறது என கூறப்பட்டுள்ளது. எத்தனை போராட்டங்கள் நடத்தினாலும் அதிமுக- பாரதிய ஜனதா உறவை யாராலும் பிரிக்கமுடியாது என்றும், மத்திய மாநில அரசுகளின் ஒற்றுமையை எவராலும் சீர் குலைக்கமுடியாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்திய அரசியலில் அதிமுகவும், பாரதிய ஜனதாவும் இரட்டை குழல் துப்பாக்கியாய் செயல்படுவதற்கான அறிகுறிகள் தெரிய தொடங்கி விட்டதாகவும், அதற்கான பாதை தெளிவாக இருப்பதாகவும், பயண திட்டத்தை இரண்டு கட்சிகளின் தலைமைதான் முடிவு செய்யவேண்டும் என்றும் அதுவே காலத்தின் கட்டாயமாக இருக்கும் என்றும் கட்டுரையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

வீடியோ

Related Tags : ADMKBLPஅதிமுகதிமுகபாஜக

Advertisement

Advertisement
[X] Close