ராஞ்சி டெஸ்ட் போட்டியில் இந்திய அணிக்குத்தான் நெருக்கடி என்று ஆஸ்திரேலிய சுழற்பந்துவீச்சாளர் நாதன் லியோன் தெரிவித்துள்ளார்.
இந்தியா-ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் 2 போட்டிகள் முடிந்துள்ள நிலையில், 1-1 என்ற கணக்கில் தொடர் சமநிலையில் உள்ளது. இவ்விரு அணிகள் இடையிலான 3ஆவது டெஸ்ட் போட்டி ஜார்க்கண்ட் மாநிலம் ராஞ்சியில் வரும் 16ம் தேதி தொடங்குகிறது. போட்டி குறித்து செய்தியாளர்களிடம் பேசிய ஆஸ்திரேலிய சுழற்பந்துவீச்சாளர் நாதன் லியோன், மூன்றாவது டெஸ்ட் போட்டிக்கு முன் முழு உடற்தகுதியை எட்ட முடியும் என தெரிவித்துள்ளார். ஆட்காட்டி விரலில் காயம் ஏற்பட்டுள்ளதால் ராஞ்சியில் நடைபெறும் மூன்றாவது டெஸ்ட் போட்டியில் லியோன் விளையாடுவாரா என்ற சந்தேகம் நிலவியது.
இந்த நிலையில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த லியோன் கடந்த முறை இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட போது இதே போன்ற காயம் ஏற்பட்டதையும், ஓரிரு நாட்களில் அதிலிருந்து மீண்டதையும் நினைவு கூர்ந்தார். இந்திய அணிக்குதான் நெருக்கடியே தவிர ஆஸ்திரேலிய அணிக்கல்ல என்று குறிப்பிட்ட லியோன், தொடரை தங்களது அணி முழுமையாக இழக்கும் என்று விமர்சகர்கள் கூறியிருந்ததையும் சுட்டிக்காட்டினார். உலகின் சிறந்த அணிகளை தங்கள் அணியால் வெல்ல முடியும் என்றும் லியோன் நம்பிக்கை தெரிவித்தார்.
Loading More post
அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த நடிகர் பூ “ராமு” காலமானார்!
மத்திய அரசின் திட்டம் என்ற பெயரில் பல கோடி ரூபாய் மோசடி - குற்றவாளி சிக்கியதன் பின்னணி!
வெளிநாட்டு கடன்களை செலுத்த இயலாமல் “திவால்” ஆகும் ரஷ்யா? காரணம் இதுதானா?
வரிகளை குறைக்க இப்படிலாமா செய்வாங்க? - பிரபல நிறுவனங்களின் தில்லாலங்கடி!
ஆன்லைன் விளையாட்டுகளுக்கு 28% ஜிஎஸ்டி?.. சண்டீகரில் நாளை தொடங்குகிறது கூட்டம்!
25 ஆண்டுகால சூர்யவம்சம்.. நந்தினிக்கள் ஏன் கொண்டாட வேண்டிய தேவதைகள்? #25YearsOfSuryaVamsam
பணமா? பாசமா?.. வாழ்க்கை தத்துவமும் ரஜினி படங்களின் கேரக்டர்களும்! - ஓர் உளவியல் பார்வை
உத்தவ் தாக்கரேவுக்கு செக் வைத்த உச்சநீதிமன்றம்! டாப் 5 லேட்டஸ்ட் தகவல்கள் இதோ!
அண்ணாமலையில் பிரபுதேவாவுக்கு என்ன வேலை? #30YearsOfAnnamalai