[X] Close

மறு சுழற்சியாகும் பபுள் கம் சுற்றுச்சூழலை பாதுகாக்க புதிய முயற்சி

The-New-effort-to-protect-the-environment-From-the

இளைஞர்கள் விரும்பி மெல்லும் பபுள் கம்மை பொது இடங்களில் வீசியெறிப்படுவதால் ஏற்படும் சுற்றுச்சூழல் மாசை சுத்தப்படுத்த லண்டனைச் சேர்ந்த பெண் ஒருவர் புதிய வழிமுறையை கண்டுபிடித்திருக்கார்.


Advertisement

பொது இடங்களில் BUBBLE GUM வீசியெறிப்படுவதால் ஏற்படும் சுற்றுச்சூழல் மாசை கட்டுப்படுத்த உலக நாடுகள் ஆண்டுக்கு ஒரு லட்சத்து 64ஆயிரம் கோடி ரூபாய் செலவிடுவதாக ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது. இங்கிலாந்தில் மட்டும் ஆண்டுதோறும் இந்திய மதிப்பில் 519 கோடி ரூபாய் செலவு செய்யப்படுகிறது. இதற்கு தீர்வுகாணும் வகையில் பிரிட்டனைச் சேர்ந்த அண்ணா புல்லஸ் என்பவர் நவீன முறையில் புதிய வழி ஒன்றை கண்டுபிடித்துள்ளார்.


Advertisement

GUM DROP என்ற நிறுவனத்தை நடத்தி வரும் அண்ணா புல்லஸ் கடந்த எட்டு ஆண்டுகள் ஆய்வுக்குப் பிறகு BUBBLE பசைகளை மறுசுழற்சி செய்துள்ளார். அவர் செய்த ஆய்வில் பாலிஸோபியூட்டிலின் என்றழைக்கப்படும் ஒரு செயற்கை ரப்பரில் இருந்து பபுள் கம் தயாரிக்கப்படுவது கண்டறியப்பட்டது. இந்த செயற்கை ரப்பர் மூலம் காலணி, சைக்கிள் டையர், விளையாட்டு பொம்மைகள் உள்ளிட்ட பல்வேறு பொருள்களை செய்ய முடியும் என்பதை கண்டுபிடித்துள்ளார். இதனை சேகரிக்கும் பணியில் அண்ணா புல்லஸ் தீவிரமடைந்தார்.

ரயில் நிலையங்கள், கேளிக்கை பூங்காக்கள், பல்கலைகழகங்கள் போன்ற 600 இடங்களில் GUM DROP நிறுவனத்தின் சேகரிப்பு மையங்கள் திறக்கப்பட்டன. கால்பந்து விளையாட்டு நடைபெறும் மைதானங்களில் பெரும்பகுதியில் இருந்து பபுள் கம்கள் கிடைத்தன. சேகரிக்கப்பட்ட மூலப் பொருளை மறுசுழற்சி செய்ததில் பல வண்ணங்களில் புதிய உருவம் பெற்றுள்ளன. மூன்று ஊழியர்கள் மட்டுமே பணியாற்றும் GUM DROP நிறுவனத்தில் இதுவரை 25 டன் BUBBLE GUMகள் மறுசுழற்சி செய்யப்பட்டுள்ளன. BUBBLE GUM விழுந்த இடத்தில் சுத்தம் செய்வதற்கு பதிலாக சேகரித்து பணத்தையும் மிச்சப்படுத்த முடிகிறது.


Advertisement

Advertisement

Advertisement
[X] Close