[X] Close

இந்தியா-வ.தே டி20: வெற்றிப்பாதையில் இந்திய அணி!

INDvsBAN-T20--India-need-140-Runs-for-Win

வங்கதேசத்திற்கு எதிரான டி20 போட்டியில் 140 என்ற வெற்றி இலக்கை நோக்கி இந்தியா விளையாடி வருகிறது. 


Advertisement

இந்தியா, இலங்கை மற்றும் வங்கதேசம் இடையிலான முத்தரப்பு டி20 கிரிக்கெட் இலங்கையில் நடைபெற்று வருகிறது. இந்தியா-இலங்கை மோதிய முதல் போட்டியில் இலங்கை 5 விக்கெட் வித்தியாசதில் வெற்றி பெற்றது. இந்நிலையில் இரண்டாவது போட்டி இன்று இந்தியா-வங்கதேசம் இடையில் நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்ற இந்திய அணி, முதலில் பந்துவீச தீர்மானித்தது. 

இதனால் முதலில் பேட்டிங்கை தொடங்கிய வங்கதேச அணி, 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 139 ரன்கள் எடுத்தது. அந்த அணி லிடான் தாஸ் 34, சபீர் ரஹ்மான் 30 ரன்கள் எடுத்தனர். மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் அவுட் ஆகினர். இந்திய தரப்பில் ஜெயதேவ் உனாட்கட் 3, விஜய் சங்கர் 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர். தற்போது 140 என்ற வெற்றி இலக்கை நோக்கி இந்திய அணி விளையாடி வருகிறது. இந்தியாவின் ஸ்கோர் 6 ஓவர்களுக்கு, 2 விக்கெட் இழப்புக்கு 47 ரன்கள். சிக்கர் தவான் 20(13), சுரேஷ் ரெய்னா 2(2) களத்தில் உள்ளனர்.


Advertisement

Advertisement

Advertisement
[X] Close