Published : 03,Mar 2018 04:36 PM

உயிரிழந்த ஆசிரியைக்கு தேர்வு பணி!

Womens--School-Headmaster-Dismissed-in-Krishnagiri

 

கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அரசுப் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் 6 மாதங்களுக்கு முன் உயிரிழந்த ஆசிரியையை தேர்வு கண்காணிப்பு பணிக்கு தலைமையாசிரியர் பரிந்துரை செய்துள்ளார். 

கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அரசுப் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் முதுகலை வணிகவியல் ஆசிரியராக பணியாற்றி வந்தவர்  இந்துமதி. இந்தப்பள்ளியில் யுவராஜ் என்பவர் தலைமையாசிரியராகப் பணியாற்றி வருகிறார். ஆசிரியை இந்துமதி கடந்தாண்டு அக்டோபர் மாதம் உடல்நலக்குறைவால் காலமானார். அதனை , மாவட்ட பள்ளிக்கல்வித்துறைக்கு தலைமையாசிரியர் யுவராஜ் தெரிவிக்கவில்லை. தொடர்ந்து, மேல்நிலை வகுப்பு பொதுத்தேர்வினை கண்காணிக்கும் பணிக்கும் உயிரிழந்த ஆசிரியையின் பெயரை யுவராஜ் பரிந்துரைத்துள்ளார். விசாரணையில் இந்த விவரம் தெரியவந்ததை அடுத்து, தலைமை ஆசிரியரை பணிநீக்கம் செய்ய மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மகேஸ்வரி உத்தரவிட்டுள்ளார்.

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்