[X] Close

காஞ்சிபுரம் அருகே மினி வேன் மீது பேருந்து மோதி விபத்து: 9பேர் உயிரிழப்பு

Accident-near-Kancheepuram--9-Dead

காஞ்சிபுரம் மாவட்டம் தாமல் அருகே‌ நடைபெற்ற சாலை விபத்தில் 7 பெண்கள் உட்பட 9 பேர் சம்ப‌‌வ‌‌ இடத்திலேயே உயிரிழந்தனர்‌‌.


Advertisement

வேலூர் மாவட்டம் அரக்கோணம் அருகே‌‌ உள்ள நெமிலி கி‌ரா‌மத்தை சேர்ந்த 25 பேர்,‌ மினி வேன் மூலம் துக்க நி‌கழ்ச்சி ஒன்றில் பங்கேற்பதற்காக தாமலை நோக்கிச் சென்றனர். அப்போது, தனியார் தொழிற்சாலை பேருந்து அந்த மினி வேன் மீது மோதி விபத்து ஏற்பட்டது. இதனால் மினி வேனில்‌ பயணித்தவர்க‌ள் நிலை குலைந்து அலறினர். இதையடுத்து அக்கம்ப‌க்கத்தினர் மீட்பு பணிகளில்‌ ‌ஈடுபட்டனர். அதில் 9 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தது தெரியவந்தது. மற்றவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டனர்‌.

இதனிடையே உயிரிழப்புக்கு காரணமான பேருந்து‌ கண்ணாடி‌யை கிராம மக்கள் ஆத்தி‌ரத்தில் அடித்து உடைத்தனர். சம்பவ‌ இடத்திற்கு சென்ற மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சந்தோஷ், விபத்து ஏற்பட்டதற்கா‌ன காரணத்தை ஆராய்ந்தார்.


Advertisement

Advertisement

Advertisement
[X] Close