இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி 10 ஆயிரம் ரன்கள் எடுக்க இன்னும் 46 ரன்கள் மட்டுமே தேவை.
இந்தியா - தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான 5வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி போர்ட் எலிசபெத்தில் இன்று நடக்கிறது. முதல் மூன்று போட்டிகளில் வென்ற இந்திய அணி 4வது ஒருநாள் போட்டியில் 5 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. இந்த போட்டியில் வெற்றி பெற்று இந்திய அணி தொடரை வெல்லும் முனைப்பில் உள்ளது.
இந்நிலையில், இந்தப் போட்டியில் 46 ரன்கள் எடுக்கும் பட்சத்தில் தோனி 10 ஆயிரம் ரன்கள் அடித்தவர் என்ற புதிய மைல்கல்லை எட்டுவார். இந்திய அணியைப் பொறுத்தவரை ஏற்கனவே சச்சின்(18,426), கங்குலி(11,363), டிராவிட்(10,889) ஆகியோர் 10 ஆயிரம் ரன்களை கடந்துள்ளனர். இந்திய அணியைப் பொறுத்தவரை 4வது வீரராக 10 ஆயிரம் ரன்களை எட்டவுள்ளார். அதேபோல், சர்வதேச அளவில் 12வது வீரராக அவர் இந்த மைல்கல்லை எட்டவுள்ளார். தோனிக்கு அடுத்த நிலையில் கேப்டன் விராட் கோலி 9,423 ரன்களுடன் 5வது இடத்தில் உள்ளார்.
தென்னாப்பிரிக்காவிற்கு எதிரான ஒருநாள் தொடரில் இந்திய அணியின் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் சரியாக விளையாடவில்லை என்ற விமர்சனம் எழுந்துள்ளது. கடந்த போட்டியில் தோனி 42 ரன்கள் எடுத்த போதும் அவர் மீதும் விமர்சனங்கள் உள்ளது. அதனால், இந்தப் போட்டியில் ரன்கள் அடித்து விமர்சனத்திற்கு பதிலடி கொடுக்க வேண்டிய கட்டாயத்தில் தோனி உள்ளார்.
316 போட்டிகளில் விளையாடியுள்ள தோனி 9954 ரன்கள் அடித்துள்ளார். அதில் 10 சதங்களும், 67 அரைசதங்களும் அடங்கும். அவரது பேட்டிங் சராசரி 51.5. முதலிடத்தில் உள்ள சச்சின் சராசரி 44.8 என்பது குறிப்பிடத்தக்கது.
Loading More post
உங்களுக்கு அதிகமாக வியர்க்கிறதா? அப்போ இவற்றை கவனியுங்க...
சம்மன் அனுப்பியும் ஆஜராகவில்லை - நுபுர் சர்மாவுக்கு எதிராக 'லுக் அவுட்' நோட்டீஸ்
தமிழில் ஒரு கே.ஜி.எஃப்?.. தனுஷ் படத்தின் மாஸ் அப்டேட் - யார் அந்த ‘கேப்டன் மில்லர்’ ?
முகமது ஜூபைருக்கு பாகிஸ்தானில் இருந்து நிதியுதவி - டெல்லி போலீஸ் தகவல்
இந்தியாவில் நிலத்தடி நீர்மட்டத்தின் தற்போதைய நிலை?
தோனி எடுத்த அந்த துணிச்சலான 5 முடிவுகள்
“நான் நிரபராதி என்றால் குற்றவாளி யார்?” காலத்தின் முன் விடையில்லா நம்பி நாராயணனின் கேள்வி!
“எங்களை கழட்டிவிட்டார்”.. தோனியை காட்டமாக விமர்சித்த இந்திய கிரிக்கெட்டின் 5 ஜாம்பவான்கள்!
"ராக்கெட்ரி பார்க்க போறீங்களா?” - அப்ப இந்த 4 வரலாற்று பின்னணியை தெரிஞ்சுட்டு போங்க!
புதிய உச்சத்தில் பாம்பு கடியால் ஏற்படும் உயிரிழப்புகள்.. தமிழகத்தின் நிலைஎன்ன? முழுநிலவரம்